பக்கம் எண் :

ஆன்ம சோதனையின் பலன் 317

Untitled Document
வேண்டும்’ என்பதே        அதன் பொருள்      எனக்கண்டேன்.
உடைமையின்மைக்கும் எல்லோரையும்     சமமாகப் பாவிப்பதற்கும்,
மனமாற்றமும், நடத்தையில் மாறுபாடும்  ஏற்படுவது முதல் அவசியம்
என்று பட்டப் பகல் போல         எனக்கு வெட்ட வெளிச்சமாகப்
புலனாயிற்று. என் மனைவியையும்    குழந்தைகளையும் என்னையும்
படைத்த கடவுள்,   எங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவார் என்பதில்
திடமான உறுதி கொண்டேன்.   உடனே நான் ரேவா சங்கர் பாய்க்கு
எழுதி, இன்ஷூரன்ஸூக்கு மேற்கொண்டு பணம்    கட்டவேண்டாம்
என்று              அறிவித்தேன்.    இதுவரை கட்டிய பணத்தில்
கிடைக்கக்கூடியதைப்      பெறப் பார்க்கும்படியும், இல்லா விட்டால்
அத்தொகையைப்    போனதாகவே     வைத்துக்கொள்ளும் படியும்
எழுதினேன். எனக்குத்    தந்தையைபோல்  இருந்துவந்தவரான என்
சகோதரருக்கும் கடிதம் எழுதினேன். அதுவரையில்   நான் மிச்சமாக
வைக்க       முடிந்ததையெல்லாம்     நான் அவருக்கே கொடுத்து
விட்டதாகவும், இனி என்னிடமிருந்து     அவர் வேறு எதுவும் எதிர்
பார்ப்பதற்கு இல்லை என்றும், மேற்கொண்டும்   என்னிடம் ஏதாவது
மீதமிருக்குமானால் அதை      இந்திய சமூகத்தின் நன்மைக்காகவே
செலவிட வேண்டியிருக்கிறது என்றும்      அவருக்கு விளக்கினேன்.

     என் சகோதரர் இதை எளிதாக  அறிந்துகொள்ளும்படி செய்ய
என்னால்           ஆகவில்லை.       அவருக்கு நான் செய்யக்
கடமைப்பட்டிருப்பதை விளக்கி அவர் எனக்குக்       கடுமையான
பாஷையில் கடிதம் எழுதினர். எங்கள்  தந்தையைவிட நான் அதிகப்
புத்திசாலியாகி விட்டதாக        எண்ணிக்கொண்டுவிட வேண்டாம்
என்றார். தாம் செய்வதைப் போன்றே         நானும் குடும்பத்தைப்
பராமரிக்க வேண்டும் என்று எழுதினார்.         தந்தையார் என்ன
செய்தாரோ அதையே         நான் செய்து வருகிறேன் என்பதைக்
குறிப்பிட்டு, அவருக்கு எழுதினேன்.           ‘குடும்பம்’ என்பதன்
பொருளைக்           கொஞ்சம் விரிவுபடுத்திக் கொண்டால், நான்
மேற்கொண்ட காரியத்தின் விவேகம் நன்கு           தெளிவாகும்.

     என் சகோதரர் என்னைக்        கைவிட்டுவிட்டார். கடிதம்
எழுதுவதைக்கூட அடியோடு நிறுத்திவிட்டார். இதனால்,  அதிகமான
வருத்தம் அடைந்தேன். ஆனால், என் கடமை        என்று நான்
கருதியதைக்        கைவிடுவதென்பதோ     இன்னும் அதிக மன
வேதனையைத்           தருவதாகிவிடும். ஆகையால், குறைவான
மனக்கஷ்டத்தை அளிப்பதாக     இருப்பதைச் செய்தேன். ஆனால்,
அது என் சகோதரரிடம் எனக்கு இருந்த பக்தியைப் பாதிக்கவில்லை.
அது எப்பொழுதும் போல்            தூயதாகவும் அதிகமாகவுமே
இருந்துவந்தது. என்மீது    அவர் வைத்திருந்த அபாரமான அன்பே
அவருடைய            துயரத்திற்கெல்லாம் காரணம். குடும்பத்தின்