பக்கம் எண் :

318சத்திய சோதனை

Untitled Document
விஷயத்தில் நான்        சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்று
விரும்பினாரேயன்றி    என் பணத்தைப் பற்றி அவர் அவ்வளவாகக்
கவலைப்படவில்லை. அவருடைய    வாழ்நாளின் அந்திய காலத்தில்
என்னுடைய கருத்தின் சிறப்பை        அவர் உணர்ந்தார். மரணத்
தறுவாயிலிருந்த சமயம், நான் செய்ததே சிறந்த காரியம்  என்பதைத்
தெரிந்துகொண்டு   எனக்கு உருக்கமான கடிதம் ஒன்றும் எழுதினார்.
தந்தை தனயனிடம்     மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுவதைப் போல்
அவர் என்னிடம்           மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். தமது
புதல்வர்களை என்னிடம் ஒப்படைப்பதாகவும்,  எனக்குச் சரி என்று
தோன்றும் வழியில்        அவர்களை வளர்க்குமாறும் அறிவித்தார்.
என்னைப்      பார்க்கவேண்டும் என்ற     ஆர்வத்தால் துடித்துக்
கொண்டிருப்பதாகவும் எழுதினார்.  தென்னாப்பிரிக்காவுக்கு வரத்தாம்
விரும்புவதாகத் தந்தி கொடுத்தார்.     அவரை வருமாறு பதிலுக்குத்
தந்தி கொடுத்தேன். ஆனால், கடவுள் சம்மதம் இல்லாமல் போயிற்று.
அவருடைய         புதல்வர்களைக் குறித்து அவர்  விரும்பியதும்
நிறைவேறவில்லை. தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்பே
அவர் இறந்துவிட்டார்.           அவருடைய குமாரர்கள்  பழைய
சூழ்நிலையில்  வளர்ந்தவர்கள். ஆகையால், அவர்கள் தங்களுடைய
வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அவர்களை
என்பால் இழுத்துக்கொள்ளவும்        என்னால் ஆகவில்லை. அது
அவர்கள் குற்றமன்று. இயற்கையான குணத்தை   மாற்றிவிட யாரால்
தான் முடியும்? பிறப்போடேயே வந்துவிட்ட எண்ணங்களை யார்தான்
மாற்றிக்  கொண்டுவிட முடியும்? தாம் வளர்ச்சி பெற்ற வகையிலேயே
தம் புதல்வர்களும்,               தமது பராமரிப்பில் இருப்போரும்
வளர்ச்சியடைவார்கள்         என்று எதிர்பார்ப்பது  வீண் ஆசை.
பெற்றோராயிருப்பது எவ்வளவு    பயங்கரமான பொறுப்பு என்பதைக்
காட்டுவதற்கு இந்த உதாரணம்       ஓரளவுக்குப் பயனுள்ளதாகிறது.

6. சைவ உணவுக் கொள்கைக்கு இட்ட பலி

     தியாகம், எளிமை என்ற         லட்சியங்கள் என் அன்றாட
வாழ்க்கையில் மேலும் மேலும் அதிகமாக  நிறைவேறி வந்தன. சமய
உணர்ச்சியும் மேலும் மேலும் துரிதமாக    எனக்கு ஏற்பட்டு வந்தது.
அதே சமயம், சைவ உணவுக் கொள்கையைப் பரப்ப வேண்டுமென்ற
ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே வந்தது.    ஒரு கொள்கையைச்
சரியானபடி    பரப்ப வேண்டுமானால், அதற்கு எனக்குத் தெரிந்தது
ஒரே ஒரு வழிதான். அந்தக் கொள்கையை    நானே கடைபிடித்துக்
காட்டுவதும்,             அறிவை வளர்த்துக்கொள்ள  ஆராய்ச்சி
செய்பவர்களுடன் விவாதிப்பதுமே அந்த வழி.

     ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு ஜெர்மானியர் சைவ  உணவு விடுதி