பக்கம் எண் :

32சத்திய சோதனை

Untitled Document
எவனோ, அவனே அறிவான் அதன் சக்தியை என்று   ஒரு  பாடலும்
கூறுகிறது. அகிம்சா           தருமத்தை அறிவதற்கு இது  எனக்குச்
சரியானதோர் பாடமாயிற்று. இதில்  தந்தையின் அன்பைத் தவிர வேறு
எதையும் நான் அப்பொழுது        காணவில்லை. ஆனால், இன்றோ,
அதுதான் சுத்தமான        அகிம்சை என்று அறிகிறேன். அத்தகைய
அகிம்சை          எல்லாவற்றிலும் வியாபிப்பதாகி விடும்போது, அது
தொட்டதையெல்லாம் தன்மயமாக்கி விடுகிறது. அதனுடைய   சக்திக்கு
ஓர் எல்லையே இல்லை.

     இவ்விதமான உயர்வான மன்னிக்கும்    குணம் என் தந்தைக்கு இயல்பானதன்று. கோபமடைவார் ;     கடுஞ் சொற்களைக் கூறுவார்; தலையில் அடித்துக் கொள்ளுவார்        என்றெல்லாம்       நான் நினைத்திருந்தேன்.        ஆனால், அவரோ அவ்வளவு அற்புதமாக
அமைதியுடன் இருந்தார். மறைக்காமல்        எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டதே   இதற்குக் காரணம் என்று நம்புகிறேன். மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை       உள்ளவரிடம்      குற்றத்தை ஒளியாது
ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி           அத்தகைய பாவத்தைச்
செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே  செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தப்படுவதாகும். என்  குற்றத்தை நான் ஒப்புக் கொண்டுவிட்டது,    என்னைப்பற்றிக் கவலையே இல்லை என்று என் தந்தையாரை உணரும்படி செய்தது என்பதை அறிவேன். என் மீதுள்ள அவரது அன்பையும் அளவு கடந்து அதிகரிக்கும்படி இது   செய்தது.

9. தந்தையின் மரணமும் என் இரு
அவமானங்களும்

     நான் இப்பொழுது கூறப்போகின்றவை என்னுடைய பதினாறாவது வயதில் நடந்தவை.     பவுந்திர நோயினால்     என் தந்தை படுத்த படுக்கையாக இருந்தார் என்பதை முன்பே      கண்டோம். அவருக்கு வேண்டிய பணிவிடைகளை     என் தாயாரும், வீட்டு வேலைகாரரான
ஒரு கிழவரும், நானும் செய்து       வந்தோம்.   என்னுடையன ஒரு
தாதிக்குரிய வேலைகள்.   முக்கியமாகப் புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டுவது, என் தந்தைக்கு மருந்து  கொடுப்பது, வீட்டிலேயே தயாரிக்க வேண்டியிருந்த மருந்துகளைச்      சேர்த்துத் தயாரிப்பது ஆகியவை
அவை. ஒவ்வொரு நாள் இரவும்   அவருக்குக் கால் பிடித்துவிடுவேன். போகுமாறு அவர் சொன்னதுமோ, அவர் தூங்கிய பிறகோதான் போய்ப்
படுத்துக் கொள்ளுவேன். இப்பணி  செய்வதற்கு நான் பிரியப்பட்டேன். இதில் நான் எப்பொழுதேனும்       அசட்டையாக இருந்து விட்டதாக
எனக்கு நினைவில்லை. எனது அன்றாடக் கடமைகளை நிறைவேற்றியது போக, பாக்கியிருக்கும் நேரத்தைப் பள்ளிக்கூடத்துக்குப் போவதிலும்,