பக்கம் எண் :

தந்தையின் மரணமும் என் இரு அவமானங்களும்33

Untitled Document
என் தந்தையாருக்குப் பணிவிடை செய்வதிலும்    கழிப்பேன்.  அவர் என்னை அனுமதிக்கும் போதோ, அவருக்கு உடம்பு கொஞ்சம் நன்றாக இருக்கும் போதோ மாத்திரம் மாலையில் உலாவிவிட்டு வரப்போவேன்.

     அது, என் மனைவி  பிள்ளைப்பேற்றை      எதிர்பார்த்திருந்த
சமயமும் ஆகும். அந்த ஒரு சந்தர்ப்பத்தை இன்று   நான் எண்ணிப் பார்க்கும்போது, அது எனக்கு       இரட்டை அவமானம் என்பதை உணருகிறேன். அச்சமயத்தில் நான்   பள்ளி மாணவனாகையால் நான் புலனடக்கத்தைக் கைக்கொண்டிருக்க  வேண்டும். ஆனால், அப்படிச்
செய்யாது போனது     ஓர் அவமானம்.    படிப்பு விஷயத்தில் என் கடமையென        நான்   கருதியதையும்,   என்   பெற்றோரிடம்
பக்தியுடனிருப்பது அதையும்விட இன்னும் பெரிய  கடமை என நான் கொண்டிருந்ததையும் மறக்கும்படி        காமவெறி செய்து விட்டது, இரண்டாவது அவமானமாகும்.   சிரவணன் போல் இருக்க வேண்டும் என்பது குழந்தைப் பருவம்      முதலே என் லட்சியமாக இருந்தது. ஒவ்வோர் இரவும், என் தந்தையாரின்      பாதங்களை என் கைகள் பிடித்துவிட்டுக்     கொண்டிருக்கும் போது என்    மனம் மாத்திரம்
என் படுக்கையறையை வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அதுவும், மதம், வைத்திய சாஸ்திரம், பகுத்தறிவு     ஆகியவைகளெல்லாம் ஒருமித்து மனைவியுடன் உடல் சேர்க்கை கூடாது        என்று தடுக்கும் ஒரு
சமயத்தில் எனக்கு அந்த மனநிலை. என் வேலையிலிருந்து விடுபடும் போதெல்லாம் மிக்க     மகிழ்ச்சியுறுவேன்.    தந்தைக்கு வணக்கம்
செலுத்திவிட்டு நேரே படுக்கை அறைக்குப் போவேன்.

     அதே சமயத்தில் என் தந்தையின்    நிலையும் நாளுக்கு நாள் மோசமாகிக்   கொண்டு வந்தது.  ஆயுர்வேத வைத்தியர்கள் தங்கள் களிம்புகளையெல்லாம்      போட்டுப் பார்த்துவிட்டனர். ஹக்கீம்கள்
தங்கள்     பிளாஸ்திரிகளையெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டார்கள். உள்ளூர் அரைகுறை வைத்தியர்களும் தங்கள் தனி    உபாயங்களை எல்லாம் கையாண்டுவிட்டனர். ஓர்         ஆங்கில சர்ஜனும் தமது
திறமையைப் பிரயோகித்துப் பார்த்துவிட்டார். சத்திர சிகிச்சை ஒன்றே கடைசியாகச்     செய்யக்கூடிய ஒரே காரியம் என்று அவர் சிபாரிசு செய்தார். ஆனால், குடும்ப வைத்தியர்       இதை ஆட்சேபித்தார். அவ்வளவு முதிர்ந்த வயதில்    சத்திர சிகிச்சை   செய்வதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.    அந்த வைத்தியர்    திறமை வாய்ந்தவர்;
பிரபலமானவர்.           ஆகையால், அவர் யோசனையே ஏற்றுக்
கொள்ளப்பட்டது. சத்திர      சிகிச்சை கைவிடப்பட்டது. அதற்காக
வாங்கிய மருந்துகளுக்கு அளவே இல்லை.      சத்திர சிகிச்சைக்கு வைத்தியர்        அனுமதித்திருந்தால் புண் எளிதில் ஆறியிருக்கும்
என்பது என் எண்ணம்.   இந்த சிகிச்சையும் பம்பாயில் அப்பொழுது பிரபலமாக இருந்த ஒரு சர்ஜன் செய்ய வேண்டும். ஆனால், கடவுள்