பக்கம் எண் :

அதிகாரத்துடன் சிறு போர்327

Untitled Document
கூறிய தத்துவத்தை           ஆதாரமாக வைத்துக் கொண்டு பால்
சாப்பிடுவதை விட்டுவிட்டவர்கள்,      ஒவ்வொரு வகையிலும் அது
அனுகூலமாக இருப்பதாக அவர்களே  கண்டாலன்றி, அனுபவமுள்ள
வைத்தியர்கள் அவர்களுக்கு ஆலோசனை     கூறியிருந்தாலொழிய
அந்தப் பரிசோதனையில் பிடிவாதமாக    இருக்க வேண்டாம் என்று
வற்புறுத்துகிறேன். இதுவரையில்        என்னுடைய அனுபவம் ஒரு
விஷயத்தைக்          காட்டிவிட்டது.       ஜீரண சக்தி பலமாக
இல்லாதவர்களுக்கும், படுத்த படுக்கையாக    இருக்கிறவர்களுக்கும்,
பாலுக்கு இணையான, எளிதில்     ஜீரணிக்கக்கூடிய போஷாக்குள்ள
ஆகாரம்              வேறு எதுவுமே இல்லை என்பதுதான் அது.

     இந்த அத்தியாயத்தைப் படிக்க நேரும்  இத்துறையில் அனுபவ
முள்ளவர்கள் யாராவது, தாம் படித்ததனால் அல்லாமல் அனுபவத்தின்
மூலம் பாலைப்போலப் போஷிக்கக் கூடியதும், போஷாக்குள்ளதுமான
ஒரு தாவரப்      பொருளைப் பாலுக்குப்   பதிலாகக் கூறுவாராயின்
அப்படிப்பட்டவருக்கு        நான் மிகவும் கடமைப்பட்டவனாவேன்.

9 அதிகாரத்துடன் சிறு போர்

     இப்பொழுது ஆசியாக்காரர்கள்   இலாகாவுக்குத் திரும்புவோம்.
ஆசியாக்காரர்கள் இலாகாவின் அதிகாரிகளுக்கு ஜோகன்னஸ் பர்கே
கோட்டை இந்தியர், சீனர், மற்றவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக
இந்த அதிகாரிகள், அவர்களை   நசுக்கிப் பிழிந்துகொண்டு வந்ததை
நான் கவனித்துக்கொண்டு வந்தேன். ஒவ்வொரு  நாளும் இதுபோன்ற
புகார்கள் எனக்கு வந்துகொண்டிருந்தன.           ‘நியாயமாக வர
வேண்டியவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.    ஆனால், வருவதற்கு
உரிமையே இல்லாதவர்கள்        100பவுன் கொடுத்தால் அவர்கள்
திருட்டுத்தனமாக உள்ளே         கொண்டுவரப்படுகிறார்கள். இந்த
அக்கிரமமான நிலைமைக்கு நீங்கள் பரிகாரம்  தேடாவிட்டால் வேறு
யார்தான் தேடப்போகிறார்கள்?’ - இதுவே புகார்.   எனக்கும் அதே
உணர்ச்சி ஏற்பட்டது. இந்தத்           தீமையை ஒழிப்பதில் நான்
வெற்றிபெறாது போவேனாயின்,      டிரான்ஸ்வாலில் நான் வீணுக்கு
வாழ்பவனே ஆவேன். ஆகவே,        சாட்சியங்களைச் சேகரிக்க
ஆரம்பித்தேன். ஓரளவுக்குச் சாட்சியங்களைச் சேகரித்ததும் போலீஸ்
கமிஷனரிடம் போனேன். அவர் நியாயமானவராகவே  தோன்றினார்.
என்னை            அலட்சியமாகப்   புறக்கணித்துவிடாமல் நான்
கூறியவைகளையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார். என்
வசமிருந்த   சாட்சியங்களையெல்லாம்     தனக்குக் காட்டும்படியும்
கேட்டார். சாட்சியங்களைத் தாமே         விசாரித்துத் திருப்தியும்
அடைந்தார். ஆனால், தென்னாப்பிரிக்காவில்       வெள்ளைக்கார
ஜூரிகள், கறுப்பு மனிதருக்குச் சாதகமாக