பக்கம் எண் :

புனித ஞாபகமும் பிராயச்சித்தமும்331

Untitled Document
     டர்பனில் நான் வக்கீல் தொழில்      நடத்தி வந்தபோது, என்
அலுவலகக்           குமாஸ்தாக்கள் பெரும்பாலும் என்னுடனேயே
தங்குவார்கள். அவர்களில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இருந்தனர்.
மாகாணவாரியாகச் சொல்லுவதாயின்,      அவர்கள் குஜராத்திகளும்
தமிழர்களும் ஆவார்கள். அவர்களும் என் உற்றார்   உறவினர்களே
என்பதைத் தவிர அவர்களை வேறுவிதமாக நான்   எப்பொழுதாவது
கருதியதாக          எனக்கு ஞாபகம் இல்லை? என் குடும்பத்தைச்
சேர்ந்தவர்களாகவே       அவர்களைப் பாவித்து நடத்தி வந்தேன்;
இவ்விதம் நான் நடத்துவதற்கு       என் மனைவி எப்பொழுதாவது
குறுக்கே நின்றால், அப்பொழுது எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படும்.
குமாஸ்தாக்களில் ஒருவர் கிறிஸ்தவர்;   தீண்டாத வகுப்பைச் சேர்ந்த
பெற்றோருக்குப் புதல்வராகப் பிறந்தவர்.

     நான் குடியிருந்த வீடு      மேற்கத்திய நாகரிகத்தையொட்டிக்
கட்டப்பட்டிருந்தது. அறைகளிலிருந்து       அழுக்கு நீர் வெளியே
போவதற்கு அவற்றில் வழி  வைக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால்,
ஒவ்வோர் அறையிலும்         அழுக்கு நீருக்கு எனத் தனித்தனிப்
பானைகள் உண்டு. இப்பானைகளை   வேலைக்காரரோ, தோட்டியோ
சுத்தம் செய்வதற்குப் பதிலாக அந்த வேலையை  என் மனைவியோ,
நானோ செய்து வந்தோம்.           வீட்டில் இருந்து பழகி விட்ட
குமாஸ்தாக்கள், அவரவர்கள்        அறையிலிருக்கும் பானைகளை
அவர்களே சுத்தம் செய்து கொள்ளுவார்கள்.    ஆனால், கிறிஸ்தவ
குமாஸ்தாவோ புதிதாக வந்தவர்.   அவருடைய படுக்கை அறையைக்
கவனித்துக் கொள்ள வேண்டியது,         எங்கள் வேலையாயிற்று.
மற்றவர்களுடைய பானைகளையெல்லாம்     சுத்தம் செய்வதில் என்
மனைவிக்கு ஆட்சேபமில்லை. ஆனால்  பஞ்சமராக இருந்த ஒருவர்
உபயோகித்த பானையைச்      சுத்தம் செய்வதென்பது அவருடைய
வரம்புக்கு மீறியதாக இருந்தது.      ஆகவே எங்களுக்குள் தகராறு
ஏற்பட்டது.    அப்பானைகளை நான் சுத்தம் செய்வது என்பதையும்
அவளால் சகிக்க முடியவில்லை.       பானையும் கையுமாக அவள்
ஏணியின் வழியாக இறங்கி       வந்துகொண்டிருந்தாள். என்னைக்
கடிந்துகொண்டாள். கோபத்தில்       அவளுடைய கண்களெல்லாம்
சிவந்திருந்தன. அவளுடைய கன்னங்களில்   முத்துபோலக் கண்ணீர்
வழிந்து கொண்டிருந்தது.         அந்தக் காட்சியை நான் இன்றும்
அப்படியே நினைவுபடுத்திக்கொள்ள முடியும். நானோ,   அன்போடு
கொடூரமும் நிறைந்த கணவன். அவளுக்கு    நானே உபாத்தியாயர்
என்று        கருதி வந்தேன். எனவே, அவளிடம் எனக்கு இருந்த
குருட்டுத்தனமான          அன்பின் காரணமாக அவளை மிகவும்
துன்பப்படுத்தினேன்.

     அவள் பானையை எடுத்துச் சென்றதனால்    மாத்திரம் நான்
திருப்தியடைந்துவிடவில்லை. அவள்            அவ்வேலையைச்