பக்கம் எண் :

334சத்திய சோதனை

Untitled Document
11 ஐரோப்பியருடன் நெருங்கிய தொடர்பு

     இந்த அத்தியாயம், என்னை     ஒரு கட்டத்திற்குக் கொண்டு
வந்திருக்கிறது.            ஒவ்வொரு வாரமும் இக்கதை எவ்விதம்
எழுதப்படுகிறது என்பதைக் குறித்து வாசகர்களுக்கு   நான் விளக்க
வேண்டியது இங்கே அவசியமாகிறது.

     இதை எழுத ஆரம்பித்தபோது        எந்த முறையில் இதை
எழுதுவது     என்பதைக் குறித்து நான் எந்தத்திட்டமும் போட்டுக்
கொள்ளவில்லை.           என்னுடைய சோதனைகளின் கதையை
எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ள       என்னிடம் எந்தவிதமான
நாட்குறிப்போ, வேறு ஆதாரங்களோ இல்லை. எழுதும்போது கடவுள்
எவ்வழியில் என்னை நடத்திச்          செல்கிறாரோ அவ்வழியில்
எழுதுகிறேன். என்னுடைய மனமார்ந்த எண்ணங்களும்  செயல்களும்
இறைவனால்          தூண்டப்பட்டவையே என்று நிச்சயமாக நான்
அறிவேன் என்றும்   நான் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால், என்
வாழ்க்கையில் நான் செய்திருக்கும்   மிகப் பெரிய காரியங்களையும்,
மிகச் சிறியவை என்று கருதக்கூடிய    காரியங்களையும் பரிசீலனை
செய்து பார்க்கும் போது       அவைகளெல்லாம் கடவுளால் நடத்தி
வைக்கப்பட்டவைதான்       என்று சொல்லுவது தவறாகாது என்றே
எண்ணுகிறேன்.

     கடவுளை நான் கண்டதுமில்லை;           அறிந்ததுமில்லை.
உலகமெல்லாம் அவர்மீது வைத்திருக்கும்     நம்பிக்கையையே என்
நம்பிக்கையாக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த       என் நம்பிக்கை
அழிக்க முடியாதது. ஆகையால் அந்த நம்பிக்கை   அனுபவத்திற்குச்
சமம் என்று கருதுகிறேன். என்றாலும்,      நம்பிக்கையை அனுபவம்
என்று விவரிப்பது  உண்மைக்கு ஊறு செய்வதாகும் என்று சொல்லக்
கூடுமாகையால் கடவுளிடம் எனக்குள்ள நம்பிக்கையை  எடுத்துக்கூற
என்னிடம் சொற்கள் இல்லை          என்று சொல்லுவதே மிகவும்
சரியானதாக இருக்கக்கூடும்.

     கடவுள் தூண்டும் வழியில் இக்கதையை   நான் எழுதுகிறேன்
என்று நான் ஏன் நம்புகிறேன்     என்பதைப் புரிந்து கொள்ளுவது
ஓரளவுக்கு இப்பொழுது          எளிதாக இருக்கக்கூடும். முந்திய
அத்தியாயத்தை       நான்     எழுத    ஆரம்பித்தபோது இந்த
அத்தியாயத்திற்குக்       கொடுத்திருக்கும் தலைப்பையே அதற்கும்
கொடுத்தேன். ஆனால், அதை நான்   எழுதிக் கொண்டிருந்தபோது
ஐரோப்பியருடன் பழகிய        அனுபவத்தைப் பற்றிக் கூறுவதற்கு
முன்னால் முகவுரையாகச் சில    விஷயங்களைச் சொல்லவேண்டும்
என்பதை உணர்ந்தேன்.          அதையே செய்து தலைப்பையும்
மாற்றினேன்.

     திரும்பவும் இப்பொழுது        இந்த அத்தியாயத்தை எழுத
ஆரம்பித்தபோது ஒரு புதிய பிரச்னை      என் முன்பு நிற்பதைக்