பக்கம் எண் :

தந்தையின் மரணமும் என் இரு அவமானங்களும்35

Untitled Document
போனேன். பாவம், என் மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
ஆனால், நான் அங்கே போன பிறகு அவள்       எவ்வாறு தூங்க
முடியும்?          அவளை   எழுப்பினேன். ஐந்து அல்லது ஆறு
நிமிடங்களுக்கெல்லாம்        வேலைக்காரன் கதவைத் தட்டினான்.
திகிலுடன்      துடித்து எழுந்தேன். “கிளம்புங்கள் ;  அப்பாவுக்குக்
கடுமையாக இருக்கிறது” என்றான்.  அவருடைய தேக நிலை மிகவும்
மோசமாகவே இருந்தது என்பதை  நான்      அறிவேன். ஆகவே,
அச்சமயத்தில் கடுமையாக இருக்கிறது என்றால்     அதன் பொருள்
இன்னதென்பதை    ஊகித்துக் கொண்டேன்.     படுக்கையிலிருந்து
குதித்தெழுந்தேன்.    “என்ன விஷயம், சொல்?” என்றேன். “தந்தை
காலமாகி விட்டார்” என்றான்.

     ஆகவே,   எல்லாம் முடிந்து  போயிற்று!     என் கைகளைப்
பிசைந்து        கொண்டேன்.  அளவு கடந்த     வெட்கத்தையும்
வேதனையையும் அடைந்தேன். என் தந்தையார் இருந்த   அறைக்கு
ஓடினேன். காமவெறி மாத்திரம்         என்னைக் குருடனாக்காமல்
இருந்திருக்குமாயின்,         கடைசி நேரத்தில் தந்தையாரிடமிருந்து
பிரிந்ததால் விளைந்த  சித்திரவதை எனக்கு நேர்ந்திராது என்பதைக்
கண்டேன். அவருடைய       பாதங்களைப்       பிடித்து விட்டுக்
கொண்டிருப்பேன்; என் கரங்களிலேயே அவர் ஆவி பிரிந்திருக்கும்.
இப்பொழுதோ, அந்தப் பாக்கியம் என்      சிறிய தகப்பனாருக்குக்
கிடைத்தது. அண்ணனிடம் அவருக்கு அளவற்ற பக்தி இருந்ததனால்,
அவருக்குக்  கடைசிச்       சேவைகளைச் செய்யும் கௌரவத்தை
அவர் தேடிக்கொண்டார்! மரணம்   நெருங்கிவிட்டது என்பதை என்
தந்தையார் அறிந்து கொண்டு,      பேனாவும் காகிதமும் கொண்டு
வருமாறு சமிக்ஞை     செய்திருக்கிறார்.   ‘இறுதிக் கிரியைகளுக்கு
வேண்டிய ஏற்பாடுகளைச்  செய்யுங்கள்’   என்று எழுதியிருக்கிறார்.
பிறகு தம் கையில்        அணிந்திருந்த காப்பையும், தங்கத் துளசி
மணிமாலையையும்    கழற்றித் தூரத்தில்      வீசிவிட்டு, ஒரு கண
நேரத்தில் உயிரை நீத்திருக்கிறார்.

     முந்திய ஓர்   அத்தியாயத்தில்    எனக்கு         ஏற்பட்ட
அவமானத்தைப்        பற்றிக் கூறினேன்.     என் தந்தை சாகும்
தறுவாயிலிருந்த நெருக்கடியான நேரத்தில் நான்       விழித்திருந்து
பணிவிடை செய்ய     வேண்டியிருக்க,    எனக்குக்     காமவெறி
ஏற்பட்டதைப் பற்றிய அவமானமே அது.  இது என்   வாழ்க்கையில்
ஏற்பட்ட கறை. இதை என்றுமே   என்னால் அழிக்கவோ, மறக்கவோ
முடிந்ததில்லை. என் பெற்றோரிடம் எனக்கு      எல்லையற்ற பக்தி
உண்டெனினும், அதற்காக எதையும் தியாகம்  செய்திருப்பேனாயினும்,
சோதித்துப்பார்த்ததில், அந்தப் பக்தி மன்னிக்க   முடியாத வகையில்
குறைபாட்டுடனேயே இருந்தது. ஏனெனில்,    அதே சமயத்தில் என்
மனம் காமத்தின்        பலமான பிடிப்பில் இருந்து  வந்தது. இதை
எப்பொழுதும் நினைத்துப்