பக்கம் எண் :

36சத்திய சோதனை

Untitled Document
பார்ப்பேன். ஆகையால், நான் விசுவாசமுள்ள கணவனாக இருந்தாலும் காமவெறியன் என்றே     என்னை என்றும் கருதலானேன் காமத்தின் விலங்கிலிருந்து விடுபட      எனக்கு அதிக காலமாயிற்று.    அதை வெல்வதற்குள் நான்    எத்தனையோ கடுஞ்சோதனைகளைக் கடக்க
வேண்டியிருந்தது.

     எனது இரு   அவமானங்களைப்  பற்றிய     அத்தியாயத்தை
முடிக்கும் முன்பு, என் மனைவியின்      வயிற்றில் பிறந்த  அந்தப் பரிதாபகரமான சிசு, மூன்று,    நான்கு நாட்கள்     கூட உயிரோடு இருக்கவில்லை என்பதையும்    நான் கூற வேண்டும். இதைத் தவிர
வேறு எதையும்           எதிர்பார்ப்பதற்கில்லை.       மணமாகி
இருப்பவர்களெல்லாம்         என்னுடைய உதாரணத்தைக்  கண்டு
எச்சரிக்கை அடைவார்களாக.

10. சமய அறிவின் உதயம்

     எனது ஆறு    அல்லது   ஏழாவது வயதிலிருந்து பதினாறாம்
பிராயம் வரையில் நான்     பள்ளிக்கூடத்தில்    படித்து வந்தேன்.
மதத்தைத் தவிர மற்ற      எல்லாவிதமான விஷயங்களைப்பற்றியும்
எனக்குப்    போதித்தார்கள்.    உபாத்தியாயர்கள்,தங்கள் அளவில்
எவ்விதமான  சிரமமுமின்றி எனக்குச் சொல்லிக்    கொடுத்திருக்கக்
கூடியவை எனக்குக் கிடைக்கவில்லை என்றே கூறுவேன். என்றாலும்,
அக்கம் பக்கங்களிலிருந்தும்    கொஞ்சம் கொஞ்சமாக சமய ஞானம்
பற்றி நான் அறிந்து    வந்தேன். சமயம் என்பதை, அதன் விரிவான
கருத்தில்- தன்னைத் தானே அறிதல் அல்லது ஆன்ம ஞானம் என்ற
பொருளிலேயே-நான் உபயோகிக்கிறேன்.

     வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவனாகையால் நான் அடிக்கடி
விஷ்ணு கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது. ஆனால், அது  என்
மனதை ஒரு போதும் கவரவில்லை. அதன்  பகட்டும் ஆடம்பரமும்
எனக்கு பிடிக்கவே இல்லை. அதோடு  ஒழுக்கவீனமான காரியங்கள்
பல அங்கே நடக்கின்றன என்ற வதந்திகளையும் கேள்விப்பட்டேன்.
ஆகவே,  கோயிலுக்குப் போவதில்      எனக்குச் சிரத்தையில்லை.
இதனால், விஷ்ணு கோயிலிலிருந்து நான்     எதையும் பெறவில்லை.

     ஆனால், கோயிலில் நான் பெற முடியாது  போனதை, எங்கள்
குடும்ப வேலைக்காரக் கிழவியான என்    செவிலித் தாயிடமிருந்து
பெற்றேன். ரம்பா என்பது அவள் பெயர். அவளுக்கு என் மீதிருந்த
பிரியம் இன்னும் என் நினைவில்      இருக்கிறது. எனக்குப் பேய்.
பிசாசுகளின் பயம் இருந்தது என்று முன்பே கூறியிருக்கிறேன். ராம
நாமத்தைத் திரும்பத் திரும்ப      உச்சரிப்பதே அந்தப் பயத்தைப்
போக்குவதற்கான மருந்து என்று        எனக்கு ரம்பா யோசனை
கூறினாள்.அவள் கூறிய பரிகாரத்தில் எனக்கு இருந்த