பக்கம் எண் :

350சத்திய சோதனை

Untitled Document
படுக்கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது,     அவர்கள் உற்சாகமாக
இருக்கும்படி  பார்த்துக்கொள்ளுவது ஆகியவையே நாங்கள் செய்ய
வேண்டியிருந்தவை.

     வேலை செய்த இளைஞர்கள் காட்டிய தளராத உற்சாகத்தையும்
பயமின்மையையும் கண்டு,      அளவு கடந்த ஆனந்தமடைந்தேன்.
டாக்டர் காட்பிரேயின் தைரியத்தையும்,   அனுபவம் மிக்கவரான ஸ்ரீ
மதன்ஜித்தின் தீரத்தையும், யாரும் அறிந்துகொள்ள முடியும். ஆனால்,
இன்னும் வயது வராதவர்களான இந்த இளைஞர்களின்  உற்சாகத்தை
என்னவென்று கூறுவது?

     அன்றிரவு எல்லா நோயாளிகளையும்     காப்பாற்றிவிட்டோம்
என்பதுதான் எனக்கு ஞாபகம். ஆனால்,    அச்சம்பவம்-அதிலுள்ள
பரிதாபம் ஒரு புறமிருக்க-     உள்ளத்தைக் கவரும் முக்கியத்துவம்
உடையதாகும். எனக்கு அது       பாரமார்த்திக மதிப்பு வாய்ந்தது.
ஆகையால், அதை விவரிக்க மேலும்  இரு அத்தியாயங்களை நான்
எழுத வேண்டும்.

16 கறுப்புப் பிளேக் - 2

     காலி வீட்டை எடுத்துக்கொண்டு,         நோயாளிகளையும்
கவனித்துக்     கொண்டதற்காக நகரசபை நிர்வாகி எனக்கு நன்றி
தெரிவித்து எழுதினார். இப்படிப்பட்டதோர்  அவசர நிலைமையைச்
சமாளிப்பதற்கு நகரசபையிடம்    உடனே செய்வதற்கான சிகிச்சை
முறைகள் எவையும் இல்லை என்பதையும்,     அவர் மனம்விட்டு
ஒப்புக்கொண்டார்.          நகரசபை தனது கடமையைக் குறித்து
விழிப்படைந்தது;            துரிதமான நடவடிக்கைகள் எடுத்துக்
கொள்ளுவதில் காலதாமதம் செய்யவில்லை.

     மறுநாள், காலியாக இருந்த        ஒரு கிடங்கை என்னிடம்
ஒப்படைத்தார்கள். நோயாளிகளை        அங்கே கொண்டுபோய்
வைத்துக்கொள்ளலாம் என்றும் யோசனை கூறினர். ஆனால், அந்த
இடத்தைச்               சுத்தம் செய்யும் வேலையை நகரசபை
எடுத்துக்கொள்ளவில்லை. அக் கட்டிடம் மிகவும்   அசுத்தமாகவும்
வசதியில்லாமலும் இருந்தது. அதை      நாங்களே சுத்தம் செய்து
கொண்டோம். தரும சிந்தனையுள்ள       இந்தியரின் உதவியைக்
கொண்டு சில படுக்கைகளையும்    தேவையான மற்றவைகளையும்
சேகரித்தோம்.   இவ்வாறு அதைத் தாற்காலிகமானதோர் வைத்திய
சாலையாக்கிக் கொண்டோம். நகர சபை, உதவிக்கு  ஒரு தாதியை
அனுப்பியது. பிராந்தி முதலிய மற்ற ஆஸ்பத்திரிச் சாதனங்களுடன்
அவர் வந்தார். டாக்டர் காட்பிரேயே இன்னும்   பொறுப்பு வகித்து
வந்தார்.     தாதி மிகுந்த அன்பானவர்: தாமே நோயாளிகளுக்குப்
பணிவிடை செய்ய விரும்பினார்.      நோய் அவருக்கும் தொத்தி
விடக்கூடும்