பக்கம் எண் :

கறுப்பு பிளேக் -2 351

Untitled Document
என்பதற்காக நோயாளிகளைத் தொட அவரை நாங்கள் விடவில்லை.

     நோயாளிகளுக்கு அடிக்கடி          பிராந்தி கொடுக்குமாறு
எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.    நோய்த் தடுப்பு முறையாகத்
தாதியும் அடிக்கடி பிராந்தி   சாப்பிட்டார். அதேபோல எங்களையும்
சாப்பிடச்சொன்னார். ஆனால்,          எங்களில் யாரும் அதைத்
தொடவில்லை. நோயாளிகளுக்குக்கூட அது      பயனளிக்கவல்லது
என்ற          நம்பிக்கை எனக்கு இல்லை. டாக்டர் காட்பிரேயின்
அனுமதியின்பேரில்            பிராந்தி சாப்பிடாமலேயே இருக்கத்
தயாராயிருந்த மூன்று நோயாளிகளுக்கு மண்     சிகிச்சை அளித்து
வந்தேன். அவர்களுடைய         தலைக்கும் மார்புக்கும் ஈர மண்
வைத்துக் கட்டினேன்.            அவர்களில் இருவர் பிழைத்துக்
கொண்டார்கள். கிடங்கிலிருந்த மற்ற இருபது பேர் இறந்து விட்டனர்.

     இதன் நடுவே நகரசபை மற்ற    நடவடிக்கைகளை எடுத்துக்
கொள்ளுவதில் தீவிரமாக இருந்தது.     ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து
ஏழுமைல் தூரத்தில் தொத்துநோய்     கண்டவர்களை வைப்பதற்கு
என்று ஓர் இடம் இருந்தது. பிழைத்திருந்த இருவரையும் அங்கிருந்த
கூடாரங்களுக்குக் கொண்டுபோயினர். புதிதாக நோய் கண்டவர்களை
அங்கே கொண்டு போவதற்கும்    ஏற்பாடு செய்தார்கள். இவ்விதம்
இவ் வேலையிலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.

     சில தினங்களுக்கெல்லாம் அந்த நல்ல தாதி அந்நோய் கண்டு
இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டோம்.    நோயாளிகளில் அந்த
இருவர் மாத்திரம்   எப்படிப் பிழைத்தார்கள், எங்களுக்கு மாத்திரம்
அந் நோய்      எப்படிப் பற்றாமல் இருந்தது என்பதைக் கூறுவது
சாத்தியமில்லை. ஆனால்,        இதில் ஏற்பட்ட அனுபவம், மண்
சிகிச்சையில் எனக்கு இருந்த     நம்பிக்கையை அதிகப்படுத்தியது.
மருந்து என்ற வகையில்கூட,      பிராந்தியின் ஆற்றலில் எனக்கு
இருந்த நம்பிக்கையின்மை பலப்பட்டது.      இந்த நம்பிக்கையோ
அல்லது இந்த           நம்பிக்கையின்மையோ எந்த உறுதியான
ஆதாரத்தையும் கொண்டது அல்ல என்பதை நான்     அறிவேன்.
ஆனால், அன்று நான் பெற்ற கருத்து இன்றும் எனக்கு அப்படியே
இருந்து வருகிறது. ஆகையால்,          அதை இங்கே குறிப்பிட
வேண்டியது அவசியம் என்று கருதினேன்.

     பிளேக் நோய் கண்டதும்        நகரசபையைக் கண்டித்துப்
பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதினேன். இந்தியர் குடியிருந்த பகுதி
நகரசபைக்குச் சொந்தமாகிவிட்ட    பிறகு அச்சபை அசட்டையாக
இருந்துவிட்ட        குற்றத்தைச் செய்திருக்கிறது என்றும், பிளேக்
தோன்றியதற்கே          அவர்கள்தான் பொறுப்பு என்றும் அதில்
எழுதினேன்.  அந்தக் கடிதத்தினால் ஸ்ரீ ஹென்றி போலக் எனக்குக்