| போனிக்ஸ் குடியிருப்பு  | 359 |  
 
 Untitled Document      கதிமோட்சம்’ என்ற நூல் பின்வருபவைகளைப்  போதிக்கிறது என்று       எனக்குத் தோன்றுகிறது:                                      | 1. |             எல்லோருடைய     நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும்              அடங்கியிருக்கிறது.            |                            | 2. |            தங்கள் உழைப்பினால்           ஜீவனோபாயத்தைத் தேடிக்              கொள்ளுவதற்கு எல்லோருக்குமே ஒரே மாதிரியான    உரிமை              இருப்பதால், க்ஷவரத் தொழிலாளியின் வேலைக்கு    இருக்கும்              அதே மதிப்புத்தான் வக்கீலின் வேலைக்கும் உண்டு. |                            | 3. |            ஒரு பாட்டாளியின்   வாழ்க்கையும், அதாவது நிலத்தில் உழுது            பாடுபடும் குடியானவரின்        வாழ்க்கையும், கைத்தொழில்            செய்பவரின் வாழ்க்கையுமே வாழ்வதற்கு உகந்த மேன்மையான            வாழ்க்கைகள். |                             இவைகளில் முதலில்         கூறப்பட்டதை நான் அறிவேன். இரண்டாவதாகக் கூறப்பட்டிருந்ததை    அரைகுறையாகவே அறிந்து கொண்டிருந்தேன். மூன்றாவதாகக் கூறப்பட்டதோ, என்    புத்தியில் தோன்றவே இல்லை. இரண்டாவதும் மூன்றாவதும்,    முதலாவதாகக் கூறப்பட்டிருப்பதிலேயே          அடங்கியிருக்கின்றன என்பதைக் ‘கடையனுக்கும் கதி மோட்சம்’  பட்டப்பகல் போல் எனக்கு வெட்ட வெளிச்சமாகி விடும்படி செய்தது.       பொழுது புலர்ந்ததும் நான் எழுந்து இந்தக் கொள்கையை நடைமுறையில்        கொண்டுவரத் தயாரானேன்.
                    எல்லாவற்றையும் குறித்து        ஸ்ரீ வெஸ்டுடன் பேசினேன். ‘கடையனுக்கும் கதிமோட்சம்’ என்ற நூல்         என் உள்ளத்தில் உண்டாக்கியிருக்கும் மாறுதலை அவருக்கு  விவரித்துச் சொன்னேன். ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையை ஒரு பண்ணைக்கு  மாற்றிவிட வேண்டும்; அப் பண்ணையில் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும், வாழ்க்கைக்கு வேண்டிய ஒரே மாதிரியான  ஊதியத்தை எல்லோரும் பெறவேண்டும், ஓய்வு நேரங்களில் அச்சக  வேலையைக்  கவனிக்க வேண்டும் என்று ஒரு யோசனையை    அவரிடம் கூறினேன். இந்த யோசனையை ஸ்ரீ வெஸ்ட் அங்கீகரித்தார்.      எந்த நிறத்தினராக இருந்தாலும், எந்த நாட்டினராக இருந்தாலும்,    ஒவ்வொருவருக்கும் மாத ஊதியம் மூன்று பவுன்தான்      என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
       ஆனால், அச்சகத்தில் வேலை செய்யும்  பத்துப் பன்னிரண்டு பேரும் இந்த ஏற்பாட்டுக்கு     ஒப்புக்கொள்ளுவார்களா? எங்கோ மூலை முடுக்கிலிருக்கும்     ஒரு பண்ணைக்குப் போய்க் குடியேறி, உயிர் வாழ்வதற்கு மாத்திரமே போதுமான     ஊதியத்தை மட்டுமே பெற்றுக்கொள்வார்களா? இதுவே     பிரச்னையாயிற்று. ஆகையால், |      |   
				 | 
				 
			 
			 |