பக்கம் எண் :

358சத்திய சோதனை

Untitled Document
விட அதிகமான வேலையைச்        செய்துவிட எனக்கு இருக்கும்
ஆசையே இதற்குக் காரணம். இந்த ஆசை,   என்னைவிட என் சக
ஊழியர்களுக்கே        அதிகத் தொந்தரவாக  முடிந்து விடுகிறது.

     ஸ்ரீ வெஸ்ட்டின் கடிதம் கிடைத்ததும்         நேட்டாலுக்குப்
புறப்பட்டேன்.          ஸ்ரீ போலக் என்    முழு நம்பிக்கைக்கும்
பாத்திரமானவர் ஆகிவிட்டார். என்னை வழியனுப்ப   ஸ்டேஷனுக்கு
வந்திருந்தார்.     பிரயாணத்தின்போது படிக்க எனக்கு ஒரு புத்தகம்
கொடுத்து விட்டுப் போனார். அது எனக்குப் பிடித்தமான புத்தகமாக
இருக்கும்     என்றும் சொன்னார். ரஸ்கின் எழுதிய ‘கடையனுக்கும்
கதிமோட்சம்’ என்ற நூலே அது.

     இந்த நூலைப் படிக்க ஆரம்பித்த        பின் நடுவில் கீழே
வைக்கவே முடியவில்லை. அது       என் உள்ளம் முழுவதையும்
கவர்ந்துகொண்டுவிட்டது. ஜோகன்னஸ்பர்க்கிற்கும்     டர்பனுக்கும்
இருபத்துநான்கு மணி நேரப்பிரயாணம். ரெயில்  அங்கே மாலையில்
போய்ச் சேர்ந்தது. அன்றிரவு என்னால்    தூங்கவே முடியவில்லை.
அந்நூலில் கண்ட லட்சியங்களுக்கு           ஏற்ற வகையில் என்
வாழ்க்கையை மாற்றிக் கொண்டு விடுவது என்று    தீர்மானித்தேன்.

     ரஸ்கினின் நூல்களில் நான் படித்த முதல் நூல் இதுவே. நான்
பள்ளிக்கூடத்தில் படித்து வந்த காலத்தில்    பாடப் புத்தகங்களைத்
தவிர அநேகமாக வேறு புத்தகங்களை நான் படித்ததில்லை எனலாம்.
சேவை வாழ்க்கையில் இறங்கிவிட்ட     பிறகு படிப்பதற்கு எனக்கு
நேரமே இருப்பதில்லை. ஆகையால்,     நூல்களைப் படித்த அறிவு
எனக்கு உண்டென்றே சொல்லிக்கொள்ளுவதற்கில்லை.   என்றாலும்,
இந்தக் கட்டாயமான தடையால் நான்          அதிகமாக நஷ்டம்
அடைந்துவிடவில்லை என்றே கருதுகிறேன்.      ஆனால், இதற்கு
மாறாக நான் கொஞ்சமாகப் படித்தது,     நான் படித்ததையெல்லாம்
அப்படியே முற்றும்     கிரகித்துக்கொண்டு விடுவதற்கு  உதவியாக
இருந்தது. அத்தகைய நூல்களில், என் வாழ்க்கையில்    உடனேயே
நடைமுறையான மாறுதலை உண்டாக்கிய நூல்  ‘கடையனுக்கும் கதி
மோட்சம்’ என்ற நூலேயாகும். பின்னர்      அதைக் குஜராத்தியில்
மொழிபெயர்த்து, ‘சர்வோதயம்’ (சர்வஜன நலம்) என்ற  பெயருடன்
வெளியிட்டேன். ரஸ்கினுடைய         இம் மகத்தான நூலில் என்
உள்ளத்தில் உறுதிப்பட்டிருந்த கொள்கைகள்   பிரதிபலித்திருப்பதை
நான் கண்டுகொண்டதாகவே நினைக்கிறேன்.    அதனால்தான் அது
என்னை           ஆட்கொணடதோடு    என் வாழ்க்கையையும்
மாற்றிக்கொள்ளும்படி செய்தது.    மனித உள்ளத்திலிருக்கும் நல்ல
தன்மையை எழுப்பிவிட வல்லவனே கவி.        ஆனால் கவிகள்,
எல்லோரின் உள்ளங்களிலும் இதேபோன்ற மாறுதல்களை உண்டாக்கி
விடுவதில்லை. ஏனெனில், எல்லோரும்    சரி சமமான வளர்ச்சியை
அடைந்திருக்கவில்லை. ‘கடையனுக்கும்