பக்கம் எண் :

ஒரு நூலின் மந்திர சக்தி 357

Untitled Document
நடத்தி வந்தார். தமது புத்திக்குப்    பிடித்தமாக இருக்கும் எதையும்
உடனே நடைமுறையில் கொண்டு வந்துவிடும்  அற்புதமான ஆற்றல்
அவருக்கு இருந்தது. தம்      வாழ்க்கையில் அவர் செய்துகொண்ட
மாறுதல்கள்,           தீவிரமானவைகளாக இருந்ததைப் போன்றே
துரிதமாகவும் செய்து கொள்ளப்பட்டவைகளாகும்.

     ‘இந்தியன் ஒப்பீனியன்’   பத்திரிகைக்கு நாளுக்குநாள் செலவு
அதிகமாகிக்கொண்டு வந்தது.    ஸ்ரீ வெஸ்ட் அனுப்பியிருந்த முதல்
அறிக்கையே பீதி தருவதாக இருந்தது. அவர் எழுதியதாவது: “லாபம்
வரக்கூடும் என்று நீங்கள் நினைத்தது போல      இந்த ஸ்தாபனம்
லாபம் தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நஷ்டமும்   வரலாம்
என்றே அஞ்சுகிறேன்.        கணக்குகள் சரிவர இல்லை. வசூலாக
வேண்டிய பாக்கி ஏராளமாக இருக்கிறது. அவைகளின் விவரத்தையே
புரிந்து கொள்ள முடியவில்லை.        எல்லாவற்றையும் அடியோடு
மாற்றியாகவேண்டும்! ஆனால்,       இதையெல்லாம் கேட்டு நீங்கள்
பீதியடைந்துவிட வேண்டாம்.           என்னால் முடிந்த வரையில்
எல்லாவற்றையும்      ஒழுங்காக்க முயல்கிறேன். லாபம் இருந்தாலும்
இல்லாதுபோனாலும், நான் இங்கே வேலை பார்க்கவேபோகிறேன்.”

     அதில் லாபம் எதுவும் வராது என்று  கண்டதுமே ஸ்ரீ வெஸ்ட்
அந்த வேலையைவிட்டுப் போயிருக்கலாம்.    அவர்மீது நான் குறை
சொல்ல முடியாது. உண்மையில் போதுமான     ருசுக்கள் இல்லாமல்
அந்த ஸ்தாபனம் லாபம் தரக்கூடியதென்று   நான் வருணித்ததற்காக
என் மீது குற்றஞ் சொல்லவும் அவருக்கு   உரிமை உண்டு. ஆனால்,
அவ்வாறு ஒரு      வார்த்தையேனும் அவர் புகார் சொல்லவில்லை.
என்றாலும், தாம் கண்டுபிடித்த நிலைமை, நான் எவரையும்  எளிதில்
நம்பிவிடக் கூடியவன்               என்று என்னை எண்ணும்படி
ஸ்ரீ வெஸ்ட்டைச் செய்திருக்கும் என்பதே   என் அபிப்பிராயம். ஸ்ரீ
மதன்ஜித் கூறியதைப் பரிசீலனை     செய்து பார்க்காமலேயே நான்
ஏற்றுக்கொண்டுவிட்டேன்.  அதைக்கொண்டு லாபம் வரும் என்று ஸ்ரீ
வெஸ்ட்டிடம் சொல்லிவிட்டேன்.

     தமக்கு நிச்சயமாகத் தெரியாதவைகளை    வைத்துக்கொண்டு
பொதுஜன ஊழியர் எதையும் சொல்லிவிடக் கூடாது என்பதை நான்
இப்பொழுது உணருகிறேன். அதிலும்  சத்தியத்தை நாடுபவன் இதில்
அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தான் பரிசீலனை செய்து
நிச்சயமாகத் தெரிந்து கொள்ளாத விஷயத்தைக் கூறி மற்றொருவரை
நம்பும்படி செய்துவிடுவது சத்தியத்திற்கு ஊறு செய்வதேயாகும். ஒரு
விஷயத்தை     ஒப்புக்கொண்டுவிட வேண்டி இருப்பதற்காக மனம்
வருந்துகிறேன். இந்த அனுபவம்       எனக்கு இருந்தும், பிறரைச்
சுலபத்தில் நம்பிவிடும்            என் சுபாவத்தை நான் இன்னும்
போக்கிக்கொண்டுவிடவில்லை.         நான் சமாளிக்கக் கூடியதை