பக்கம் எண் :

362சத்திய சோதனை

Untitled Document
ஆரம்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள்,      செய்யப்பட்ட மாறுதல்கள்,
நம்பிக்கைகள், ஏமாற்றங்கள்          ஆகியவைகளுக்கு ஒரு தனி
அத்தியாயமே அவசியமாகிறது.

20 முதல் இரவு

     போனிக்ஸிலிருந்து ‘இந்தியன் ஒப்பீனியனி’ன்   முதல் இதழை
வெளியிடுவது              எளிதான காரியமாகவே இல்லை. இரு
முன்னெச்சரிக்கையான             காரியங்களை நான் செய்யாது
இருந்திருப்பேனாயின்,       முதல் இதழை நிறுத்திவிடவே நேர்ந்து
இருக்கும்;        அல்லது வெளியாவது தாமதப்பட்டிருக்கும். அச்சு
இயந்திரத்தை ஓட்ட ஓர் இன்ஜின் வைத்துவிடுவது என்ற யோசனை
எனக்குப் பிடிக்கவில்லை.  விவசாய வேலையையும் கையினாலேயே
செய்யவேண்டியிருக்கும் ஓர் இடத்தில்,         அச்சு இயந்திரமும்
கையினாலேயே சுற்றப்படுவதாக இருப்பதே    அந்த சூழ்நிலைக்குப்
பொருத்தமானதாக இருக்கும்    என்று நினைத்திருந்தேன். ஆனால்,
இந்த யோசனை சரியானதாகத் தோன்றாது போகவே ஓர் எண்ணெய்
இன்ஜினை அமைத்தோம்.      இன்ஜின் சரியாக வேலை செய்யாது
போனால்,        உடனே செய்வதற்கான வேறு ஏற்பாடும் தயாராக
இருக்கட்டும் என்று        வெஸ்டுக்கு யோசனை கூறி இருந்தேன்.
ஆகவே  கையினால் சுற்றக்கூடிய ஒரு சக்கரத்தையும் அவர் தயார்
செய்து வைத்திருந்தார். பத்திரிகையின் அளவு, தினப் பத்திரிகையின்
அளவாக இருப்பது,        போனிக்ஸ் போன்ற   ஒதுக்குப்புறமான
இடத்திற்கு வசதியானதல்ல என்று       யோசிக்கப்பட்டது. அவசர
நிலைமை ஏற்பட்டால் ‘டிரடில்’          அச்சு இயந்திரத்திலேயே
பத்திரிகையை அச்சிட்டு விடுவதற்குச் சௌகரியமாக   இருக்கட்டும்
என்பதற்காகப் பத்திரிகை, ‘புல்ஸ்காப்’ அளவுக்குக் குறைக்கப்பட்டது.

     ஆரம்ப காலங்களில் பத்திரிகை   வெளியாவதற்கு முன்னால்
நாங்கள் இரவில்         வெகுநேரம் கண் விழிக்கும்படி ஆயிற்று.
இளைஞர்களும், கிழவரும் ஒவ்வொருவரும்  பத்திரிகைத் தாள்களை
மடிக்க உதவவேண்டியிருந்தது. வழக்கமாக    இரவு பத்து மணிக்கு
மேல் பன்னிரெண்டு மணிக்குள் வேலையை  முடிப்போம். ஆனால்,
முதல் நாள் இரவு        என்றுமே மறக்க முடியாது. பக்கங்களை
முடுக்கியாயிற்று; இயந்திரமோ      வேலை செய்ய மறுத்துவிட்டது.
இன்ஜினை முடுக்கி அதை ஓட்டிக்கொடுப்பதற்காக  டர்பனிலிருந்து
ஒரு இன்ஜினீயரைத் தருவித்து         வைத்திருந்தோம். அவரும்
வெஸ்டும் எவ்வளவோ     கஷ்டப்பட்டுப் பார்த்தார்கள். ஆனால்,
ஒன்றும் பயன்படவில்லை. எல்லோருக்கும் ஒரே      கவலையாகி
விட்டது. எல்லா முயற்சியும் முடியாது போய்க்       கடைசியாகக்
கண்களில் நீர் வழிய வெஸ்ட் என்னிடம் வந்தார்.      “இன்ஜின்
வேலை