பக்கம் எண் :

முதல் இரவு363

Untitled Document
செய்யாது. உரிய காலத்தில் பத்திரிகையை நாம்   வெளியிடமுடியாது
என்றே அஞ்சுகிறேன்” என்றார்.

     “அதுதான் நிலைமையென்றால் இதில்       நாம் செய்வதற்கு
எதுவுமில்லை. கண்ணீர் விட்டு ஒரு       பயனும் இல்லை. மனிதப்
பிரயத்தனத்தில் சாத்தியமானதையெல்லாம் செய்வோம்.  கைச்சக்கரம்
இருக்கிறதல்லவா”? என்று அவருக்கு          ஆறுதல் அளித்துச்
சொன்னேன்.

     “அதைச் சுற்றுவதற்கு நம்மிடம் ஆட்கள் எங்கிருக்கிறார்கள்?”
என்று அவர் கேட்டார்.     “அந்த வேலையைச் செய்வதற்கு நாம்
போதாது. நான்கு நான்கு பேராக   மாற்றி மாற்றிச் சுற்ற வேண்டும்.
நம் ஆட்களோ, களைத்துப்         போயிருக்கின்றனர்” என்றார்.

     கட்டிட வேலை இன்னும் முடிந்துவிடவில்லை.    ஆகையால்,
தச்சர்கள் அந்த வேலையைச் செய்துவந்தனர்.    அவர்கள் அச்சுக்
கூடத்திலேயே படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.      நான்
அவர்களைச் சுட்டிக்காட்டி,             “இந்தத் தச்சர்களை நாம்
பயன்படுத்திக் கொள்ள முடியாதா?        நமக்கு இரவு முழுவதும்
வேலை இருக்கும். இந்த உபாயம் நமக்குப்  பாக்கியமாக இருக்கிறது
என்று நினைக்கிறேன்” என்றேன்.

     “தச்சர்களை எழுப்ப         எனக்குத் தைரியமில்லை. நம்
ஆட்களோ உண்மையில் மிகவும்  களைத்துப் போயிருக்கின்றனர்”
என்றார் வெஸ்ட்.

     “சரி, அவர்களோடு நான் பேசிக்கொள்ளுகிறேன்” என்றேன்.

     “அப்படியானால், வேலையை முடித்துவிடுவது   சாத்தியமே”
என்றார், வெஸ்ட்.

     தச்சர்களை எழுப்பினேன். ஒத்துழைக்க     வேண்டும் என்று
அவர்களைக்        கேட்டுக்கொண்டேன்.  அவர்களை வற்புறுத்த
வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. “அவசரத்திற்கு   எங்களைக்
கூப்பிட்டுக் கொள்ளுவதற்கில்லையென்றால்        நாங்கள் இங்கே
இருந்துதான் என்ன பயன்?    நீங்கள் கொஞ்சம் இளைப்பாறுங்கள்.
சக்கரத்தைச் சுற்றும் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்.
அது எங்களுக்குச் சுலபம்” என்றார்கள். எங்கள் சொந்த ஆட்களும்
தயாராக இருந்தனர்.

     வெஸ்ட்டுக்கு ஒரே ஆனந்தம்.       நாங்கள் வேலை செய்ய
ஆரம்பித்ததும் அவர் ஒரு தோத்திரப் பாடலைப்   பாட ஆரம்பித்து
விட்டார்.          தச்சர்களுடன்     நானும் சேர்ந்துகொண்டேன்.
மற்றவர்களெல்லாம் அவரவர்கள்       முறையில் கலந்து கொண்டு
வேலை செய்தார்கள். இவ்வாறு காலை ஏழு மணி வரையில் வேலை
செய்தோம்.     இன்னும் வேலை எவ்வளவோ பாக்கியாக இருந்தது.
ஆகவே, வெஸ்ட்டிடம் ஒரு யோசனை கூறினேன்.    இன்ஜினீயரை
எழுப்பி இயந்திரத்தை ஓட்டச் சொல்லிப்