பக்கம் எண் :

364சத்திய சோதனை

Untitled Document
பார்க்கலாம் என்றேன். இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டால் காலத்தில்
வேலையை முடித்துவிடலாம்.

     வெஸ்ட் அவரை எழுப்பினார்.          எழுந்ததும் இன்ஜின்
அறைக்குப் போனார். என்ன         ஆச்சரியம் பாருங்கள்! அவர்
தொட்டவுடனேயே இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டது. அச்சுக் கூடம்
முழுவதும் ஒரே சந்தோஷ ஆரவாரமாக இருந்தது.   “இது எப்படி?
இரவெல்லாம் நாம் கஷ்டப்பட்டும் முடியாமல் போயிற்று.   ஆனால்,
இன்று காலையிலோ அதில்   எந்தவிதமான கோளாறுமே இல்லாதது
போல அது வேலை செய்ய         ஆரம்பித்துவிட்டதே?” என்று
விசாரித்தேன்.

     “இது எப்படி என்று கூறுவது கஷ்டம்.    நம்மைப் போலவே
தனக்கு ஓய்வு தேவை என்பதுபோல      இயந்திரமும் சில சமயம்
நடக்க ஆரம்பித்துவிடுகிறது போல் இருக்கிறது” என்று வெஸ்ட்டோ,
இன்ஜினீயரோ கூறினார்கள்.            சொன்னது யார் என்பதை
மறந்துவிட்டேன்.

     இன்ஜின் கோளாறு ஆகிவிட்டது எங்கள் எல்லோருக்கும் ஒரு
சோதனையாக ஆயிற்று என்றும்,     எங்களுடைய யோக்கியமான,
மனப்பூர்வமான உழைப்பின் பலனாகவே  இன்ஜின் வேலை செய்யத்
தொடங்கியது என்றும் எனக்குத் தோன்றிற்று.

     பிரதிகளும் உரிய காலத்தில்    அனுப்பப்பட்டன. எல்லோரும்
மகிழ்ச்சியடைந்தோம்.

     ஆரம்பத்தில் காட்டிய         இந்தப் பிடிவாதம், பத்திரிகை
ஒழுங்காக வெளியே            வந்து கொண்டிருக்கும் என்பதை
உறுதிப்படுத்தியது.           போனிக்ஸில்    சுயபலத்தில் நிற்கும்
சூழ்நிலையையும் உண்டாக்கியது.      வேண்டுமென்றே இன்ஜினை
உபயோகிப்பதை நாங்கள் நிறுத்தி விட்டு,         ஆள் பலத்தைக்
கொண்டே வேலை         செய்த சமயமும் உண்டு. போனிக்ஸில்
குடியேறியிருந்தவர்களின்          தார்மிக குணம் உச்ச நிலைக்கு
எட்டியிருந்த சமயமே அது என்பது என் கருத்து.

21 போலக் துணிந்து இறங்கினார்

     போனிக்ஸில் நான்        குடியேற்றத்தை ஆரம்பித்துவிட்ட
போதிலும்   அங்கே நான் நிரந்தரமாக வசிக்க முடியாமல் இருந்தது,
எப்பொழுதும் எனக்கு வருத்தத்தைக்  கொடுத்தது. நாளாவட்டத்தில்
வக்கீல் தொழிலிலிருந்து விலகி,    இக்குடியேற்றத்தில் வசித்து, என்
உடலுழைப்பினால் என்             ஜீவனத்திற்கு வேண்டியதைச்
சம்பாதித்துக்கொண்டு, போனிக்ஸ் பூரணத்துவத்தை   அடைய நான்
செய்யும் சேவையின் இன்பத்தை அனுபவிக்க வேண்டும்  என்பதே
என்னுடைய ஆரம்ப எண்ணம். ஆனால்,   அது நிறைவேறவில்லை.
நாம் ஒன்று நினைக்கத் தெய்வம்    ஒன்று நினைக்கிறது என்பதை
அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால்,