பக்கம் எண் :

போலக் துணிந்து இறங்கினார்365

Untitled Document
அதே சமயத்தில் முடிவான லட்சியம்,       சத்தியத்தை நாடுவதாக
மாத்திரம் இருந்துவிடுமானால், மனிதன்  போடும் திட்டம் எவ்வளவு
தான் தவறிப் போனாலும், முடிவு      தீமையானதாக ஆவதில்லை
என்பதுடன், சில சமயங்களில்           எதிர்பாத்ததைவிட அதிக
நன்மையானதாகவும் முடிந்துவிடுகிறது.      போனிக்ஸ் குடியேற்றம்
எதிர்பாராத விதமாக மாறுதல் அடைந்ததும், எதிர் பாராமல் நேர்ந்த
சில நிகழ்ச்சிகளும், நாங்கள் ஆரம்பத்தில்     எதிர்பார்த்ததைவிட
மேலாக முடிந்தன என்று         சொல்லுவது கஷ்டமேயானாலும்,
தீமையாக மாத்திரம் முடியவில்லை.

     நாங்கள் எல்லோரும், உடல்      உழைப்பினாலேயே ஜீவனம்
செய்வது சாத்தியமாக வேண்டும்  என்பதற்காக,   அச்சுக்கூடத்தைச்
சுற்றி இருந்த நிலத்தை ஆளுக்கு  மூன்று    ஏக்கர் வீதம் பிரித்துக்
கொண்டோம். இதில் ஒரு பகுதி     என் பங்குக்கு விழுந்தது. இந்த
ஒவ்வொரு பகுதி நிலத்திலும்,     எங்கள் விருப்பத்திற்கு மாறாகவே
இரும்புத் தகடு போட்டு          வீடுகளைக் கட்டினோம். நாங்கள்
விரும்பியதெல்லாம், வைக்கோல் வேய்ந்த      மண் குடிசைகளைக்
கட்டிக்கொள்ளு வதுதான். இல்லாவிட்டால்,      சாதாரண விவசாயி
வசிக்கக் கூடிய வகையில் சிறு        செங்கல் வீடுகளைக் கட்டிக்
கொள்ளுவது என்பதே.  ஆனால், அது நிறைவேறவில்லை. அப்படிக்
கட்டுவதாக இருந்தால்       அதிகச் செலவாகும்;   அதிக காலமும்
பிடிக்கும். நாங்களோ,          கூடுமானவரையில் சீக்கிரத்திலேயே
குடியேற்றத்தில்        நிலைபெற்றுவிட வேண்டும் என்பதில் அதிக
ஆவலுடன் இருந்தோம்.

     மன்சுக்லால் நாஸரே இன்னும்        பத்திரிகை ஆசிரியராக
இருந்தார். புதிய திட்டத்தை         அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
‘இந்தியன் ஒப்பீனியனு’க்கு டர்பனில்     ஒரு கிளைக் காரியாலயம்
இருந்தது. அங்கே இருந்துகொண்டே அவர்      இப் பத்திரிகைக்கு
வேலைசெய்து வந்தார்.        அச்சுக் கோர்ப்போருக்குச் சம்பளம்
கொடுத்து வந்தோம். ஆனால்,           குடியேற்றத்தைச் சேர்ந்த
ஒவ்வொருவரும், அச்சுக் கோர்க்கக் கற்றுக்கொண்டு  விடவேண்டும்
என்பது என் அபிப்பிராயம்.        அச்சுக்கூடத்தில் இந்த வேலை
அலுப்புத் தட்டும்          வேலையானாலும் சுலபமான வேலையே.
ஆகையால், இதற்கு முன்னால்          இந்த வேலையைக் கற்றுக்
கொள்ளாதிருந்தவர்கள்,   இப்பொழுது கற்றுக்கொண்டோம். ஆனால்,
இந்த வேலையில் நான் கடைசி வரையில் திறமை இல்லாதவனாகவே
இருந்தேன். மகன்லால் காந்தி இதில்      எங்களெல்லோரையும்விட
முதன்மையாய் இருந்தார். இவர், இதற்கு முன்னால் அச்சுக்கூடத்தில்
வேலையே செய்ததில்லையென்றாலும்,   அச்சுக் கோர்ப்பதில் அதிக
சமர்த்தராகி விட்டார்.                  அதிக வேகமாக அச்சுக்
கோர்ப்பவராகிவிட்டதோடு