பக்கம் எண் :

366சத்திய சோதனை

Untitled Document
மாத்திரமல்லாமல், அச்சுக் கூடத்தின்      எல்லா வேலைகளையுமே
வெகுவிரைவில் கற்றுக் கொண்டுவிட்டார்.       இது எனக்கு அதிக
ஆச்சரியத்தையும்  மகிழ்ச்சியையும் அளித்தது. அவருடைய ஆற்றல்
அவருக்கே தெரியாது என்பதுதான் எப்பொழுதும் என் அபிப்பிராயம்.

     கட்டிடங்களைக் கட்டி முடித்து நாங்கள்   அங்கே நிலை பெற
ஆரம்பித்தவுடனேயே, புதிதாக அமைந்திருந்த கூட்டை  விட்டுவிட்டு
நான் ஜோகன்னஸ்பர்க்கிற்குப்     போக வேண்டியதாயிற்று. அங்கே
இருந்த வேலைகளை நான் கவனிக்காமலேயே    அதிக காலத்திற்கு
விட்டுவைத்துவிட என்னால் ஆகவில்லை.

     ஜோகன்னஸ்பர்க்கிற்குத் திரும்பியதும்,    நான் செய்திருக்கும்
முக்கியமான மாறுதல்களைக் குறித்து   ஸ்ரீ போலக்கிடம் கூறினேன்.
அவர் இரவல் கொடுத்த புத்தகம் இவ்வளவு பலனுள்ளதாக ஆயிற்று
என்பதை அறிந்ததும் அவர் அடைந்த   ஆனந்தத்திற்கு எல்லையே
இல்லை. “இப் புதிய முறையில்     நானும் பங்கெடுத்துக் கொள்ளச்
சாத்தியப்படாதா?” என்று கேட்டார்.      “நிச்சயமாகச் சாத்தியமே.
நீங்கள் விரும்பினால் நீங்களும்           குடியேற்றத்தில் சேர்ந்து
கொள்ளலாம்”     என்றேன். “என்னைச் சேர்த்துக் கொள்ளுவதாக
இருந்தால் நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

     அவருடைய உறுதி என்னைக் கவர்ந்துவிட்டது.     ‘கிரிடிக்’
பத்திரிகையில் தாம் செய்து வந்த வேலையிலிருந்து ஒரு மாதத்தில்
விலகிக்கொள்ள அனுமதிக்குமாறு பிரதம ஆசிரியருக்கு எழுதினார்.
பின்னர் அதிலிருந்து     விலகிப் போனிக்ஸு க்கு வந்து சேர்ந்தார்.
தமது இனிய சுபாவத்தினாலும், எல்லோருடனும் நன்றாகப்   பழகும்
குணத்தினாலும், வெகு சீக்கிரத்தில்        அவர் எல்லோருடைய
மனத்தையும் கவர்ந்துவிட்டார். எங்கள் குடும்பத்தில்  ஒருவராகவும்
ஆகிவிட்டார். எளிமை     அவருடைய சுபாவத்திலேயே இருந்தது.
போனிக்ஸ் வாழ்க்கை          அவருக்கு விசித்திரமானதாகவோ,
கஷ்டமானதாகவோ தோன்றவில்லை. நீரிலிருப்பது மீனுக்கு எவ்விதம்
இயற்கையோ அதேபோல் இவ்வாழ்க்கை      அவருக்கு ஒத்ததாக
இருந்தது. ஆனால், அவரை        அங்கேயே அதிக காலம் நான்
வைத்திருப்பதற்கில்லை. இங்கிலாந்துக்குப்    போய்த் தமது சட்டப்
படிப்பை முடிக்க             ஸ்ரீ ரிச் விரும்பினார். எனவே, என்
அலுவலகத்தின் வேலை பளுவை       நான் ஒருவனே சமாளித்து
விடுவதென்பது அசாத்தியம். ஆகவே, என் அலுவலகத்தில் சேர்ந்து
அட்டர்னியாகப்        பயிற்சி பெறுமாறு போலக்குக்கு யோசனை
கூறினேன். முடிவில் நாங்கள் இருவருமே     அத் தொழிலிலிருந்து
விலகிப் போனிக்ஸில் நிலைத்துவிடலாம் என்று  எண்ணியிருந்தேன்.
ஆனால், அது          நிறைவேறாமலேயே போய்விட்டது. நம்பும்
சுபாவமுள்ளவர், போலக் ஒரு நண்பரிடம்