பக்கம் எண் :

கடவுள் யாரைக் காக்கிறார் 367

நம்பிக்கை      வைத்து விடுவாரானால்,    அவரோடு விவாதித்துக்
கொண்டிருப்பதைவிட          ஒத்துப் போகவே அவர் முயல்வார்.
போனிக்ஸிலிருந்து எனக்கு எழுதினார். அங்கே இருக்கும் வாழ்க்கை
தமக்கு இன்பமாக இருக்கிறதென்றாலும்,      தாம் சந்தோஷமாகவே
இருப்பினும்,        குடியேற்றத்தை அபிவிருத்தி செய்யலாம் என்று
நம்பினாலும், இதை விட்டுவிட்டுக்         காரியாலயத்தில் சேர்ந்து
அட்டர்னிக்குப் பயிற்சி பெறுவதனால் நாங்கள் எங்கள்  லட்சியத்தை
வெகு சீக்கிரத்தில் அடைந்து விடமுடியும் என்று நான் நினைத்ததால்
அப்படியே செய்யத் தாம் தயார் என்று எழுதினார்.   இக்கடிதத்தை
நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். போலக்,    போனிக்ஸிலிருந்து
கிளம்பி ஜோகன்னஸ்பர்க்கிற்கு வந்து பயிற்சி பெறத்  தஸ்தாவேஜில்
கையெழுத்தும் இட்டார்.

     அதே சமயத்தில் ஸ்காட்லாந்துக்காரரான    ஒரு பிரம்மஞான
சங்கத்தினரையும் போலக்கைப்       பின்பற்றும்படி அழைத்தேன்.
உள்ளூர்ச் சட்டப் பரீட்சைக்குப் போவதற்காக    அவர் என்னிடம்
முன்பு பயிற்சி பெற்று வந்தார். இப்பொழுது      என் அழைப்பை
ஏற்றுக்கொண்டு வக்கீல் குமாஸ்தாவாகச் சேர்ந்தார்.   ஸ்ரீ மெக்கின்
டயர் என்பது அவர் பெயர்.

     இவ்வாறு, போனிக்ஸில் லட்சியங்களைச் சீக்கிரத்தில் அடைந்து
விடவேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் பேரில், நான் வேறு  ஒரு
திக்கில் மேலும் மேலும்      தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கிறேன்
என்று தோன்றியது. கடவுள் மாத்திரம் வேறுவிதமாக எனக்கு அருள்
செய்யாதிருந்தால், எளிய வாழ்க்கையின்     பெயரால் விரித்திருந்த
வலையில் நான் சிக்கிக்கொண்டிருந்திருப்பேன்.

     யாருமே எண்ணியோ, எதிர்பார்த்தோ இராத வகையில், நானும்
என்னுடைய லட்சியங்களும் எவ்வாறு காப்பாற்றப் பட்டன என்பதை
இன்னும் சில அத்தியாயங்களுக்குப் பிறகு நான் விவரிப்பேன்.

22 கடவுள் யாரைக் காக்கிறார்?

     வருங்காலத்தில்           இந்தியாவுக்குத் திரும்புவது என்ற
நம்பிக்கையை  எல்லாம் இப்பொழுது அடியோடு கைவிட்டுவிட்டேன்.
ஓர் ஆண்டில் திரும்பி வந்துவிடுவேன் என்று     என் மனைவிக்கு
வாக்களித்திருந்தேன்.          நான்        திரும்புவதற்கான ஏது
எதுவுமில்லாமலேயே அந்த ஓராண்டும் முடிந்துவிட்டது. ஆகையால்,
அவளையும் குழந்தைகளையும்    வரவழைத்துக்கொள்ளுவது என்று
தீர்மானித்தேன்.

     அவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு வந்துகொண்டிருந்த கப்பலில்
என் மூன்றாவது மகன் ராமதாஸ், கப்பல் காப்டனுடன்