பக்கம் எண் :

368சத்திய சோதனை

Untitled Document
விளையாடிக் கொண்டிருக்கையில் விழுந்து       கையை முறித்துக்
கொண்டான். காப்டன்             அவனை நன்றாகக் கவனித்துக்
கொண்டதோடு கப்பல் டாக்டர்      அவனுக்குச் சிகிச்சை செய்யும்
படியும் ஏற்பாடு செய்தார்.       கட்டுப்போட்ட கையோடு ராமதாஸ்
கப்பலிலிருந்து இறங்கினான்.    வீட்டுக்குப் போனதும் தக்க டாக்டர்
ஒருவரைக் கொண்டு அவன் காயத்திற்குக்   கட்டுக்கட்ட வேண்டும்
என்று கப்பல் டாக்டர் ஆலோசனை கூறினார்.    மண் சிகிச்சையில்
நான் பூரணமாக நம்பிக்கை  வைத்திருந்த சமயம் அது. என்னுடைய
அரைகுறை வைத்தியத்தை நம்பிய என் கட்சிக்காரர்கள்  சிலரையும்
மண், நீர் சிகிச்சை செய்து         கொள்ளும்படி தூண்டிவந்தேன்.

     இந்த நிலைமையில் ராமதாஸ்       விஷயத்தில் நான் என்ன
செய்வது? அப்பொழுது அவனுக்கு எட்டு வயது.   அவனுக்கு நான்
கட்டு கட்டிவிடுவதில் சம்மதந்தானா என்று   அவனைக் கேட்டேன்.
அவன் சிரித்துக்கொண்டு சம்மதம் என்றான்.       தனக்கு நல்லது
இன்னது என்பதை அந்த வயதில்          அவன் முடிவு செய்து
கொள்ளுவது சாத்தியமில்லை.         ஆனால், அரை குறையான
வைத்தியத்திற்கும் சரியான வைத்திய சிகிச்சைக்கும்  உள்ள பேதம்
அவனுக்குத் தெரியும். என்னுடைய வீட்டு   வைத்தியப் பழக்கத்தை
அவன்  அறிவான்.     தன்னை என்னிடம் ஒப்படைத்து விடுவதில்
அவனுக்கு நம்பிக்கையும் இருந்தது.      பயந்து நடுங்கிக்கொண்டே
அவனுக்குப் போட்டிருந்த        கட்டை அவிழ்த்தேன். புண்ணை
அலம்பினேன். அதன்மீது      சுத்தமான மண் பற்றும் போட்டேன்.
பிறகு கைக்குக் கட்டுப் போட்டேன்.      புண் முற்றும் ஆறிவிடும்
வரையில் ஒரு மாத காலம்            இவ்விதம் கட்டுப்போடுவது
தினந்தோறும் நடந்து வந்தது.       எந்தத் தொந்தரவுமே இல்லை;
சாதாரண சிகிச்சையினால் எவ்வளவு காலத்தில் இப் புண் ஆறிவிடும்
என்று கப்பல் டாக்டர் கூறியிருந்தாரோ அதைவிட இப்பொழுது அது
ஆறுவதற்கு அதிக காலம் ஆகவில்லை.

     இதுவும், என்னுடைய மற்றப் பரீட்சைகளும், வீட்டு வைத்திய
முறையில் எனக்கு இருந்த நம்பிக்கையை  அதிகப் படுத்தின. நான்
இப்பொழுது அதிகத்         தன்னம்பிக்கையுடன் இம்முறைகளை
மேற்கொண்டும் கையாளலானேன்.     மற்றும் பல நோய்களுக்கும்
இம்முறையைக் கையாண்டேன்.    புண்கள், ஜு ரங்கள், அஜீரணம்,
காமாலை ஆகிய       நோய்களுக்கெல்லாம் மண், நீர் வைத்தியம்
செய்து வந்தேன். அநேகமாகக்     குணமாகிக் கொண்டே வந்தன.
ஆனால், தென்னாப்பிரிக்காவில்  இதில் எனக்கு இருந்த நம்பிக்கை
இப்பொழுது இல்லை. இந்தச் சிகிச்சைகளில் அபாயங்களும் உண்டு
என்பதை அனுபவத்தில் அறிந்திருக்கிறேன்.