பக்கம் எண் :

சமய அறிவின் உதயம்39

Untitled Document
மற்றச் சமயங்களிடம் சகிப்புத்      தன்மையுடன் நடந்து கொள்ளும்
பண்பை இவைகளெல்லாம் சேர்ந்தே என்னுள் வளர்த்தன.

     அச்சமயம் கிறிஸ்தவ மதம் மாத்திரம் இதற்கு   ஒரு விலக்காக
இருந்தது.  அதனிடம் எனக்கு ஒருவகை வெறுப்பு இருந்தது. அதற்கு
ஒரு காரணமும் உண்டு.  அக்காலங்களில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள்,
உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் தெருத் திருப்பத்தில் நின்றுகொண்டு
ஹிந்துக்களையும் அவர்களுடைய     தெய்வங்களையும் தூஷித்துக்
கொண்டிருப்பார்கள்.         இதை என்னால் சகிக்க முடிவதில்லை.
அவர்கள் சொல்லுவதைக் கேட்க ஒரே ஒரு தடவை மாத்திரமே நான்
அங்கே நின்றிருப்பேன். இந்தப் பரீட்சை இனி   வேண்டாம்  என்று
நான்    தீர்மானித்துவிட்டதற்கு அது    ஒன்றே போதுமானதாயிற்று.
ஏறக்குறைய    அதே       சமயத்தில் பிரபலமான ஹிந்து ஒருவர்,
கிறிஸ்தவத்திற்கு மதம்      மாற்றப்பெற்றார் என அறிந்தேன். அவர்
‘ஞானஸ்நானம்’ செய்விக்கப் பெற்ற போது,     மாட்டிறைச்சி தின்று,
மதுபானமும் குடிக்க வேண்டியிருந்தது என்றும், தமது  உடையையும்
அவர் மாற்றிக் கொள்ள     வேண்டியதாயிற்று என்றும் ஊரெங்கும்
ஒரே பேச்சாக இருந்தது. அது முதல் அவர் ஐரோப்பிய உடையுடன்
தொப்பியும்      போட்டுக்    கொண்டு   அங்குமிங்கும்   போக
ஆரம்பித்தாராம்.இவையெல்லாம்  எனக்கு வெறுப்பை உண்டாக்கின.
‘மாட்டிறைச்சி தின்ன வேண்டும் என்றும், குடிக்கவேண்டும் என்றும்,
தமது சொந்த உடையை  மாற்றிக் கொண்டுவிட வேண்டும் என்றும்,
ஒருவரைக் கட்டாயப் படுத்தும்           ஒரு மதம், மதம் என்ற
பெயருக்கே நிச்சயமாக          அருகதையில்லாதது’ என்று நான்
எண்ணினேன்.      புதிதாக மதம் மாறியவர், தமது மூதாதையாரின்
மதத்தையும்,     பழக்க வழக்கங்களையும், நாட்டையும் தூஷித்துப்
பேசவும் தலைப்பட்டு விட்டார்        என்றும் கேள்விப்பட்டேன்.
இவைகளெல்லாம்     கிறிஸ்தவத்தின் மீது    எனக்கு வெறுப்பை
உண்டாக்கின.

     மற்றச் சமயங்களிடம்       சகிப்புத் தன்மை கொள்ள நான்
கற்றிருந்தேன் என்றால், உண்மையில் எனக்கு கடவுளிடம் திடமான
நம்பிக்கை இருந்தது என்பது       பொருளல்ல. அந்த சமயத்தில்
மனுஸ்மிருதியையும் நான் படிக்க நேர்ந்தது. படைப்பைப்  பற்றியும்,
அது போன்ற விஷயங்களைக் குறித்தும் அதில்    கூறப்பட்டிருந்த
கதை எனக்கு அவ்வளவாக        நம்பிக்கை ஊட்டுவதாயில்லை.
இதற்கு மாறாக   நாஸ்திகத்தை     நோக்கி ஓரளவுக்கு என்னைச்
சாயும்படியும் அது செய்தது.

     என் பெரியப்பா பிள்ளை ஒருவர்    உண்டு. அவர் இன்றும் இருக்கிறார்.
அவருடைய அறிவாற்றலில் எனக்கு    அபார மதிப்பு
உண்டு.        எனக்கு இருந்த  சந்தேகங்களையெல்லாம் குறித்து
அவரிடம் கேட்டேன். ஆனால்,   அவற்றைத் தீர்த்துவிட அவரால்