பக்கம் எண் :

40சத்திய சோதனை

Untitled Document
இயலவில்லை.  “உனக்கு வயதானதும் இந்தச் சந்தேகங்களை எல்லாம்
நீயே தீர்த்துக்      கொண்டு விடுவாய். இந்த வயதில் இப்படிப்பட்ட
சந்தேகங்கள்   உனக்குத் தோன்றலாகாது”     என்று பதில் சொல்லி,
அவர் என்னை அனுப்பிவிட்டார். என் வாய்  அடைபட்டுப் போயிற்று.
ஆயினும், மனம் திருப்தியடையவில்லை.      மனுஸ்மிருதியில் உணவு
பற்றியும் அது போன்றவை குறித்தும் கூறப் பட்டிருந்தவை,    தினசரி
வழக்கத்திற்கு மாறுபட்டவை என எனக்குத் தோன்றின. இதில் எனக்கு
உண்டான      சந்தேகத்திற்கும் அதே பதில்தான் கிடைத்தது. ‘அறிவு
வளர வளர,       அதிகமாகப் படிக்க படிக்க, அதை நான் நன்றாகப்
புரிந்து கொள்ளுவேன்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

     மனுஸ்மிருதி,   அக்காலத்தில்   அகிம்சா  தருமத்தை எனக்குப்
போதிக்கவில்லை என்பது மாத்திரம் உண்மை. நான் புலால்    உண்ட
கதையைக் கூறியிருக்கிறேன். அதை      மனுஸ்மிருதி ஆதரிப்பதாகத்
தோன்றியது.        பாம்புகள்,   மூட்டைப் பூச்சி முதலியவைகளைக்
கொல்லுவது முற்றும்     நியாயமானதே என்று கருதினேன். மூட்டைப்
பூச்சிகள் போன்ற ஐந்துகளைக் கொல்லுவது ஒரு கடமை எனக் கருதி
அந்த வயதில் அவற்றை நான் கொன்றது எனக்கு   நினைவிருக்கிறது.

     ஆனால், ஒன்று மாத்திரம்       என்னுள் ஆழ வேரூன்றியது;
‘ஒழுக்கமே          எல்லாவற்றிற்கும்    அடிப்படை ;  சத்தியமே
ஒழுக்கமெல்லாவற்றின் சாரமும் ’    என்று நான் கொண்ட உறுதியே
அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன்
மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக்
கொண்டே வந்தது.

     அதேபோல நன்னெறியைப்      போதிக்கும் ஒரு குஜராத்திப்
பாடலும் என் அறிவையும்    உள்ளத்தையும் கொள்ளை கொண்டது.
‘ தீமை செய்தோருக்கும் நன்மையே செய் ’     என்ற அப்பாடலின்
போதனை, என் வாழ்க்கையில் வழிகாட்டும்   தருமமாயிற்று.  அதில்
எனக்கு அதிக பிரேமை உண்டாகி விட்டதால் அதை மேற்கோளாகக்
கொண்டு  பற்பல சோதனைகளையும் செய்யத் தொடங்கினேன். மிக
அற்புதமானவை என நான் எண்ணும் அப்பாடலின் வரிகள்  இவை:

‘உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய்
விண்ணமுதைப்போல்அன்னம் விரும்பிப் படைத்திடுவாய்.
அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீதொழுவாய்.
செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய்.
உயிர்காத்தோன்துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய்.
செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர்
சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும்