பக்கம் எண் :

இங்கிலாந்து போக ஆயத்தம்41

Untitled Document
ஒன்றுக்குப் பத்தாய் உவந்து செய்வர் பேருதவி,
வையத்தார் எல்லோரும் ஒன்றெனவே மாண்புடையோர்
ஐயப்பா டின்றி அறிந்திருக்கும் காரணத்தால்
இன்னாசெய்தாரை ஒறுக்க, அவர் நாண
நன்னயம் செய்து விடுவர் இந்நானிலத்தே.’

11. இங்கிலாந்து போக ஆயத்தம்

     1887-இல் நான்     மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறினேன்.
அப்பொழுது அகமதாபாத், பம்பாய் ஆகிய         இரு இடங்களில்
அப்பரீட்சை நடப்பது வழக்கம். நாட்டின் பொதுவான  வறுமை நிலை
காரணமாக, இயற்கையாகவே          சமீபத்தில் இருக்கும், அதிகச்
செலவில்லாத இடத்திற்கே கத்தியவார்  மாணவர்கள் சென்றனர். என்
குடும்பத்தின்          வறுமையினால் நானும்   அவ்விதமே செய்ய
வேண்டியதாயிற்று. ராஜ்கோட்டிலிருந்து     அகமதாபாத்துக்கு முதன்
முதலாக,    அதிலும் துணையின்றி,       நான் பிரயாணம் செய்தது
அப்பொழுதுதான்.

     மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறிய பின்   நான் கல்லூரியில்
சேர்ந்து தொடர்ந்து படித்துவர       வேண்டும் என்று வீட்டிலிருந்த
பெரியவர்கள் விரும்பினர்.  பவநகரில் ஒரு    கல்லூரி    இருந்தது;
பம்பாயிலும்    இருந்தது.   பவநகரில்           படித்தால் செலவு
அதிகமாகாதாகையால் அங்கே போய்ச் சாமளதாஸ்      கல்லூரியில்
சேருவதென முடிவு     செய்தேன். அவ்வாறே சேர்ந்தும் விட்டேன்.
ஆனால், அங்கே எனக்குத்  திக்குத் திசை  புரியவில்லை. எல்லாமே
எனக்குக்       கஷ்டமாக  இருந்தது.     நான் சிரத்தை எடுத்துக்
கொள்ளவில்லை  என்பது  இருக்கட்டும், முதலில்  பேராசிரியர்களின்
பிரசங்கங்களே  எனக்குப் புரியவில்லை.  இது அப்பேராசிரியர்களின்
குற்றமன்று. அக்கல்லூரி பேராசிரியர்கள் முதல்தரமானவர்கள்  என்று
பெயர்    பெற்றவர்கள். ஆனால், நான் தான் கல்லூரிப்  படிப்புக்குப்
பண்படுத்தப் படாதவனாய் இருந்தேன். ஆறு      மாதமானதும் வீடு
திரும்பினேன்.

     மாவ்ஜி தவே என்ற கல்வியறிவுள்ள பிராமணர்,       எங்கள்
குடும்பத்திற்கு நண்பரும்  ஆலோசகருமாக இருந்தார். அவர்  புத்திக்
கூர்மையுள்ளவர். என்       தந்தையார்  இறந்த பிறகும்கூட அவர்
எங்கள் குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்தார். விடுமுறைக்கு நான்
ஊர் போயிருந்தபோது ஒரு முறை அவர்  எங்கள் வீட்டுக்கு வந்தார்.
என் தாயாருடனும் என் தமையனாருடனும் பேசிக்கொண்டிருந்தபோது
என் படிப்பைப் பற்றியும் விசாரித்தார். நான் சாமளதாஸ்  கல்லூரியில்
படிக்கிறேன் என்பதை அறிந்ததும் அவர்     பின்வருமாறு கூறினார்:
‘இப்பொழுது காலம் மாறிப் போய்விட்டது.   தக்க படிப்பு இல்லாமல்
உங்களில்