பக்கம் எண் :

குடும்ப சத்தியாக்கிரகம் 391

Untitled Document
உடனே ஒரு முடிவு கட்டிவிட்டாள்.   “சுவாமிஜி, நீங்கள் என்ன
சொன்னாலும் சரி, மாட்டு மாமிச சூப்   சாப்பிட்டுக் குணமடைய
நான் விரும்பவில்லை.    தயவுசெய்து என்னை மேற்கொண்டும்
தொந்தரவு செய்யாதீர்கள்.          நீங்கள் விரும்பினால் என்
கணவருடனும்   குழந்தைகளோடும் விவாதித்துக் கொள்ளுங்கள்.
ஆனால்,     நான் ஒரு தீர்மானம் செய்து கொண்டு விட்டேன்” என்று சொல்லிவிட்டாள்.

29 குடும்ப சத்தியாக்கிரகம்

     சிறை வாழ்க்கையில் முதல் அனுபவம் எனக்கு ஏற்பட்டது
1908-ஆம் ஆண்டில். கைதிகள்   அனுசரித்தாக வேண்டிய சில
கட்டுத் திட்டங்கள், ஒரு பிரம்மச்சாரி    அதாவது புலனடக்கம்
செய்துகொள்ள விரும்புகிறவர்         தாமாகவே அனுபவிக்க
வேண்டியவைகளாக          இருந்தன என்பதைக் கண்டேன்.
உதாரணமாக, அத்தகையதோர் கட்டுத்  திட்டம், தினம் கடைசிச்
சாப்பாட்டைச் சூரியன்        மறைவதற்கு முன்னால் முடித்துக்
கொண்டு விடவேண்டும் என்பது.     இந்தியக் கைதிகளுக்கோ,
ஆப்பிரிக்கக் கைதிகளுக்கோ தேநீரோ     அல்லது காப்பியோ
கொடுப்பதில்லை. சமைத்த உணவில் வேண்டுமானால்  அவர்கள்
உப்புச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், ருசியைத்    திருப்தி
செய்வதற்காக என்று மாத்திரம்           அவர்கள் எதையும்
சாப்பிடக்கூடாது. எங்களுக்குக் கறிமசாலைப் பொடி கொடுக்கும்
படியும் உணவைச் சமைக்கும்போதே அதில் உப்பைச் சேர்த்துக்
கொள் அனுமதிக்குமாறும் சிறை வைத்திய       அதிகாரியைக்
கேட்டேன். அதற்கு அவர் கூறியதாவது:       “ருசி பார்த்துச்
சாப்பிடுவதற்காக      நீங்கள் இங்கே இல்லை. உடல்நலனைப்
பொறுத்த வரையில் கறிமசாலைப்பொடி    அவசியமே இல்லை.
சமைக்கும் போது உப்பைச் சேர்ப்பதற்கும்   பின்னால் உப்புப்
போட்டுக் கொள்ளுவதற்கும்     எந்த வித்தியாசமும் இல்லை”.

     அதிகக் கஷ்டத்தின்    பேரிலேயே ஆயினும், பின்னால்
இந்தத் தடைகளுக்கெல்லாம் விமோசனம்  ஏற்பட்டது. ஆனால்,
அவை         இரண்டும் புலனடக்கத்திற்குச் சிறந்த விதிகள்.
வெளியிலிருந்து விதிக்கப்படும்     கட்டுப்பாடுகள் அநேகமாக
வெற்றி பெறுவதில்லை. ஆனால்,       அந்தக் கட்டுப்பாடுகள்
தமக்குத் தாமே        விதித்துக் கொண்டவையாக இருப்பின்,
நிச்சயமாக            நல்ல பலனை அளிக்கின்றன. ஆகவே
சிறையிலிருந்து விடுதலையானாலும்     அவ்விரு விதிகளையும்
எனக்கு நானே விதித்துக் கொண்டேன். சாத்தியமான வரையில்
தேநீர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். கடைசிச் சாப்பாட்டைச்
சூரியன் மறைவதற்கு          முன்னால் முடித்து விடுவேன்.
இவ்விரண்டையும்              அனுசரிப்பதற்கு இப்பொழுது