பக்கம் எண் :

புலனடக்கத்தை நோக்கி 395

Untitled Document
விவாதித்தேன்.

     ‘தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திரம்’ என்ற புத்தகத்தில்
ஸ்ரீ கால்லென்பாக்கை வாசகர்களுக்கு       நான் அறிமுகம் செய்து
வைத்திருந்தபோதிலும், முந்திய ஒரு அத்தியாயத்தில் அவரைப்பற்றிக்
குறிப்பிட்டிருந்தாலும்,    அவரைக் குறித்து இங்கே மேலும் கொஞ்சம்
சொல்ல வேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன். முதன்முதலில்
தற்செயலாகவே நாங்கள் சந்தித்தோம். அவர்   ஸ்ரீ கானுக்கு நண்பர்.
அவருடைய உள்ளத்தின் ஆழத்தில் பர உலகப்பற்று இருப்பதை ஸ்ரீ
கான் கண்டுபிடித்ததால், அவரை எனக்கு        அறிமுகம் செய்து
வைத்தார்.

     அவரை அறிய ஆரம்பித்ததும்,     சுகபோக வாழ்க்கையிலும்
ஆடம்பரத்திலும்          அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு
திடுக்கிட்டுப் போனேன்.            ஆனால் எங்களுடைய முதல்
சந்திப்பிலேயே சமய சம்பந்தமாக மிகவும் நுணுக்கமான கேள்விகளை
எல்லாம் அவர் கேட்டார்.       பேச்சின் நடுவில் கௌதமபுத்தரின்
துறவைப் பற்றியும்  பேசினோம். எங்களுடைய பழக்கம் சீக்கிரத்தில்
நெருங்கிய நட்பாகக் கனிந்தது. எங்கள்   இருவரின் எண்ணங்களும்
ஒன்றுபோல் ஆயின. என் வாழ்க்கையில்  நான் செய்து கொள்ளும்
மாறுதல்களைத் தாமும் தமது வாழ்க்கையில்  அனுசரிக்க வேண்டும்
என்று உறுதி கொண்டார்.

     அச்சமயம் அவருக்கு மணமாகவில்லை,  வீட்டு வாடகையைச்
சேர்க்காமல் தமக்கு மாத்திரம் மாதம்  ரூ.1,200 செலவழித்து வந்தார்.
இப்பொழுதோ, மாதம்   ரூ.120 மாத்திரம் செலவு செய்து கொள்ளும்
அளவுக்குத் தமது வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டுவிட்டார்.
என் குடித்தனத்தை எடுத்துவிட்ட பிறகு,           முதல் தடவை
சிறையிலிருந்து விடுதலையான பின்னர், நாங்கள் இருவரும் சேர்ந்து
வசிக்கத் தொடங்கினோம். நாங்கள் நடத்தியது  மிகவும் கஷ்டமான
வாழ்க்கையே.

     இந்த சமயத்தில் தான் பாலைப்பற்றி  நாங்கள் விவாதித்தோம்.
ஸ்ரீ கால்லென்பாக் கூறியதாவது:     “பாலினால் ஏற்படக்கூடிய தீய
விளைவுகளைக் குறித்து நாம்   ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்.
அப்படியானால், நாம் ஏன்    அதை விட்டு ஒழித்து விடக்கூடாது?
நிச்சயமாக அது அவசியமானதே அல்ல.”    இந்த யோசனையைக்
கேட்டு எனக்கு ஆச்சரியமும்    திருப்தியும் ஒருங்கே ஏற்பட்டன.
அதைச் சந்தோஷமாக வரவேற்றேன்.   அப்பொழுதிலிருந்தே பால்
சாப்பிடுவதை விட்டுவிடுவதென்று    இருவரும் பிரதிக்ஞை செய்து
கொண்டோம். இது நடந்தது      டால்ஸ்டாய் பண்ணையில், 1912ல்.

     ஆனால்,      பாலை மறுப்பது மாத்திரம் எனக்குப் போதிய
திருப்தியளித்து விடவில்லை.   இதற்குப் பின் சீக்கிரத்திலேயே பழ