பக்கம் எண் :

பட்டினி விரதம் 397

Untitled Document
31 பட்டினி விரதம்

     பால் சாப்பிடுவதையும்,       தானிய வகைகள் உண்பதையும்
விட்டுவிட்டுப் பழ ஆகார        சோதனையை ஆரம்பித்த அதே
சமயத்தில், புலனடக்கத்திற்கு ஒரு சாதனமாகப் பட்டினி     விரதம்
இருக்கவும் தொடங்கினேன்.                இதில் என்னுடன் ஸ்ரீ
கால்லென் பாக்கும் சேர்ந்து கொண்டார்.        இதற்கு முன்னால்
அவ்வப் போது நான்       பட்டினி விரதம்  இருந்து வந்ததுண்டு.
ஆனால், அந்த விரதம் முற்றும்   தேக ஆரோக்கியத்திற்காகத்தான்
புலனடக்கத்திற்கும் பட்டினி    அவசியம் என்பதை ஒரு நண்பரின்
மூலம் அறிந்தேன்.

     நான் வைஷ்ணவக்    குடும்பத்தில் பிறந்தவனாதலாலும், என்
தாயாரும்          கடுமையான விரதங்களை எல்லாம் அனுசரித்து
வந்ததாலும், இந்தியாவில் இருந்தபோது ஏகாதசி போன்ற விரதங்கள்
இருந்திருக்கிறேன். ஆனால், அப்பொழுதெல்லாம்   என் தாயாரைப்
போல் நடக்க வேண்டும் என்பதற்காகவும்,       என் பெற்றோரை
மகிழ்விப்பதற்காகவுமே அந்த விரதங்கள் இருந்தேன்.

     பட்டினி விரதத்தின் நன்மை   அந்தக் காலங்களில் எனக்குத்
தெரியாது. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.   ஆனால், நான்
மேலே குறிப்பிட்ட நண்பர்,      பிரம்மச்சரியத்திற்குச் சாதனமாகப்
பட்டினி விரதத்தை அனுசரித்து நன்மை பெற்றிருக்கிறார்  என்பதை
அறிந்ததும், அந்த உதாரணத்தை நானும் பின்பற்றி  ஏகாதசி விரதம்
இருந்து வந்தேன். ஹிந்துக்கள் இத்தகைய விரத தினங்களில் பாலும்
பழமும் மாத்திரம் சாப்பிடுவது உண்டு. ஆனால்,   இந்த விரதத்தை
நான்        தினமும் அனுசரித்து வந்ததால், நீரைத் தவிர எதுவும்
சாப்பிடுவதில்லை. என்று விரதத்தைத் தொடங்கினேன்.

     இந்தச் சோதனையை நான் ஆரம்பித்தபோது,  ஹிந்துக்களின்
சிராவண மாதமும்,         முஸ்லிம்களின் ரம்ஜான் மாதமும் ஒரே
சமயத்தில் வந்தன. காந்தி வம்சத்தினர்,    வைஷ்ணவ விரதங்களை
மட்டுமின்றிச்     சைவ விரதங்களையும் அனுசரிப்பது உண்டு. சிவ
ஆலயங்களுக்கும்         விஷ்ணு ஆலயங்களுக்கும் போவார்கள்.
குடும்பத்தைச் சேர்ந்த சிலர், சிராவண மாதத்தில்  பிரதோஷ விரதம்
(மாலை வரையில் பட்டினி இருப்பது)  அனுசரிப்பதும் உண்டு. இந்த
விரதத்தை நானும் அனுசரிப்பது என்று தீர்மானித்தேன்.

     இந்த முக்கியமான     சோதனைகளையெல்லாம் டால்ஸ்டாய்
பண்ணையில்       இருந்தபோதே மேற்கொண்டோம். அங்கே ஸ்ரீ
கால்லென்பாக்கும் நானும்              சில சத்தியாக்கிரகிகளின்
குடும்பங்களுடன் இருந்தோம். சில இளைஞர்களும் குழந்தைகளும்