பக்கம் எண் :

398சத்திய சோதனை

Untitled Document
கூட எங்களுடன் இருந்தார்கள்.          இக்குழந்தைகளுக்கு ஒரு
பள்ளிக்கூடம் வைத்திருந்தோம்.    அவர்களில் நான்கு, ஐந்து பேர்
முஸ்லிம்கள். தங்கள் மத      சம்பந்தமான நோன்புகளையெல்லாம்
அனுசரித்து வருமாறு அவர்களை   நான் உற்சாகப்படுத்தி வந்தேன்.
நாள்தோறும்                 அவர்கள் நமாஸ் செய்து வருமாறும்
கவனித்துக்கொண்டேன். கிறிஸ்தவ,       பார்ஸிச் சிறுவர்களும்கூட
அங்கே இருந்தார்கள்.            அவர்களும் தங்கள் தங்கள் மத
சம்பந்தமானவைகளை அனுசரிக்கும்படி செய்ய    வேண்டியது என் கடமை என்று கருதினேன்.

     ஆகையால், அந்த மாதத்தில்    ரம்ஜான் பட்டினி விரதத்தை
அனுசரிக்கும்படி முஸ்லிம்       சிறுவர்களைத் தூண்டினேன். என்
அளவிலோ, பிரதோஷ விரதமிருப்பதென்று தீர்மானித்தேன். ஆனால்,
ஹிந்து, கிறிஸ்தவ, பார்ஸிச் சிறுவர்களையும்     என்னுடன் சேர்ந்து
விரதமிருக்கும்படி கூறினேன்.   விரதானுஷ்டானம் போன்றவைகளில்
மற்றவர்களுடன் சேர்ந்துகொள்ளுவது  நல்லது என்று அவர்களுக்கு
விளக்கிக் கூறினேன்.       பண்ணையில் இருந்தவர்கள் பலர் என்
யோசனையை வரவேற்றார்கள். ஹிந்து,        பார்ஸிச் சிறுவர்கள்,
விரதத்தின் எல்லாச்          சிறு விவரங்களிலும் முஸ்லிம்களைப்
பின்பற்றவில்லை; அது அவசியமும் அல்ல.   பகலெல்லாம் பட்டினி
இருந்துவிட்டுச்       சூரியன் மறையும்போதே முஸ்லிம் சிறுவர்கள்
சாப்பிடுவார்கள்.           ஆனால் மற்றவர்களோ அப்படி சூரிய
அஸ்தமனத்திற்குக் காத்திருப்பதில்லை.   ஆகவே, இவர்கள் தங்கள்
முஸ்லிம் நண்பர்களுக்கு இனிய பண்டங்களைத் தயாரித்துப் பரிமாற
முடிந்தது. அதோடு மறுநாள் காலையில்    சூரியன் உதயமாவதற்கு
முன்னால்  முஸ்லிம் குழந்தைகள் சாப்பிடுவார்கள்.    அதே போல
ஹிந்து, பார்ஸிக் குழந்தைகள்    சாப்பிடுவதில்லை. முஸ்லிம்களைத்
தவிர மற்றவர்கள் பகலில் தண்ணீர் குடிப்பார்கள்.

     இந்தச் சோதனைகளின் பலனாக,        பட்டினி விரதத்தின்
நன்மையை எல்லோரும்         உணர்ந்தார்கள். இவர்களிடையே
அற்புதமான தோழமையும் வளர்ந்தது.

     டால்ஸ்டாய் பண்ணையில் நாங்கள் எல்லோருமே சைவ உணவு
சாப்பிடுகிறவர்கள். இதில் எல்லோரும்    என் உணர்ச்சியை மதித்து
நடந்துகொண்டதை நான்      நன்றியறிதலுடன் ஒப்புக் கொள்ளவே
வேண்டும். முஸ்லிம் சிறுவர்கள் வழக்கமாகச் சாப்பிட்டு வந்த மாமிச
உணவை ரம்ஜான் காலத்தில் விட்டுவிட வேண்டிவந்தது.    ஆனால்,
அதைக் குறித்து அவர்களில் யாரும்   என்னிடம் குறை சொன்னதே
இல்லை. சைவச் சாப்பாட்டை       அவர்கள் சுவைத்துச் சாப்பிட்டு
இன்புற்றனர்.     பண்ணையின் எளிய வாழ்வை அனுசரித்து, ஹிந்து
இளைஞர்கள் அவர்களுக்கு அடிக்கடி சைவப்  பட்சணங்கள் செய்து
கொடுப்பார்கள்.