பக்கம் எண் :

4சத்திய சோதனை

Untitled Document

குழந்தைப் பருவத்தில்      போர்பந்தரிலேயே  இருந்தேன். அங்கே
என்னைப் பள்ளிக்கூடத்தில் வைத்தது    எனக்கு  நினைவிருக்கிறது.
கொஞ்சம் சிரமத்தின்         பேரில்தான் பெருக்கல் வாய்ப்பாட்டை
நெட்டுருப் போட்டேன். மற்றச்     சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு
எங்கள் உபாத்தியாயரை ஏளனம் செய்து திட்டக் கற்றுக் கொண்டேன்
என்பதைத் தவிர அந்த நாட்களைக் குறித்து வேறு எதுவுமே எனக்கு
நினைவில்லை. இதிலிருந்து அப்பொழுது நான்  மந்தபுத்தியுள்ளவனாக
இருந்தேன் என்றும், எனக்கு ஞாபகசக்தி போதாமல் இருந்தது என்றும்
யூகிக்க முடிகிறது.

2. குழந்தைப் பருவம்

     எனக்குச் சுமார் ஏழு வயது இருக்கலாம்.ராஜஸ்தானிக மன்றத்தில்
உறுப்பினராவதற்காக           என் தந்தையார், போர்பந்தரிலிருந்து
ராஜ்கோட்டுக்குச்     சென்றார். அங்கே     என்னை ஓர் ஆரம்பப்
பாடசாலையில்   சேர்த்தார்கள். அந்த    நாட்களில் எனக்குப் பாடம்
சொல்லிக் கொடுத்த      உபாத்தியாயர்களின்  பெயர் உட்பட எல்லா
விவரங்களுமே எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றன. போர்பந்தரில்
இருந்ததைப்போன்றே  இங்கும்   என்னுடைய        படிப்பைப்பற்றி
முக்கியமாகக் குறிப்பிடக்கூடியது     எதுவுமில்லை. சாதாரண நடுத்தர
மாணவனாகவே  நான் இருந்திருப்பேன். இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து
நகரை    அடுத்திருந்த     ஒரு பள்ளிக்கு என்னை அனுப்பினார்கள்.
பன்னிரெண்டு வயதாகிவிடவே பிறகு உயர்தரப் பள்ளியில் சேர்த்தனர்.
இந்தக் குறுகிய காலத்தில் என்  ஆசிரியர்களிடத்திலோ, என் பள்ளித்
தோழர்களிடத்திலோ   ஒரு    பொய்யேனும்    எப்பொழுதும் நான்
சொன்னதாக     எனக்கு   ஞாபகமில்லை. எனக்குக் கூச்சம் அதிகம்;
யாருடனும் சேர மாட்டேன். என்    புத்தகங்களும் என் பாடங்களுமே
எனக்கு உற்ற தோழர்கள். சரியான    நேரத்தில் பள்ளிக்கூடத்துக்குப்
போய்விடுவது, பள்ளிக்கூடம்    விட்டதும் வீட்டுக்கு ஓடிவந்துவிடுவது
இதுவே எனது     அன்றாடப் பழக்கம்.         யாருடனும் பேசவே
பிடிக்காதாகையால் உண்மையில் ஓட்டமாகத்தான் வீடுவந்து சேருவேன்.
இல்லா விட்டால் வழியில்         யாராவது என்னைக் கேலி செய்து
விடுவார்களோ என்று பயம்.

     உயர்தரப்பள்ளியில் நான் படித்த முதல் ஆண்டில் பரீட்சையின்
போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு.அது இங்கே குறிப்பிடத்தக்கது.
கல்வி இலாகா      இன்ஸ்பெக்டர்    ஸ்ரீ கைல்ஸ் அப்பள்ளிக்கூடச்
சோதனைக்காக வந்திருந்தார்.  எழுத்துக் கூட்டி எழுதும் பயிற்சிக்காக
அவர் எங்களுக்கு   ஐந்து      சொற்களைக்கூறி அவற்றை எழுதச்
சொன்னார். அதில் ஒரு சொல் ‘கெட்டில்’