பக்கம் எண் :

410சத்திய சோதனை

Untitled Document
அந்த உயர்வு எண்ணத்தை அவர்கள்        புத்தியில் புகுத்துவது
அவர்களைத் தவறான        வழியில் செலுத்துவதேயாகும். மற்றச்
சிறுவர்களுடன் அவர்கள் பழகுவது   அவர்களுக்கு நல்ல ஒழுங்கு
முறையை அளிப்பதாக இருக்கும்.       நல்லது இன்னது, கெட்டது
இன்னது என்பதை அவர்கள் தாங்களாகவே தெரிந்துகொள்வார்கள்.
என் புதல்வர்களிடம் உண்மையாகவே            ஏதாவது நல்லது
இருக்குமாயின் அவர்களுடன் பழகுகிறவர்களிடமும்     அது பிரதி
பலிக்கும் என்று நாம் ஏன் நம்பக்கூடாது? அது    எப்படியானாலும்
சரி, அவர்களை நான் இங்கேதான்   வைத்திருக்கவேண்டும். அதில்
சிறிது ஆபத்து இருந்தபோதிலும், அதற்கும்   நாம் தயாராக இருக்க
வேண்டியதே” என்றேன்.

     ஸ்ரீ கால்லென்பாக் தலையை    அசைத்துக்கொண்டார். இதன்
பலன் தீமையானதாக இருந்தது      என்று நான் நினைக்கவில்லை.
இந்தச் சோதனையினால் என் குமாரர்கள்     எந்தக் கெடுதலையும்
அடைந்துவிட்டதாகவும் நான் கருதவில்லை.       ஆனால், இதற்கு
மாறாக அவர்கள் சில நன்மைகளையும்   அடைந்தார்கள் என்பதை
நான் காண முடிகிறது.   தாங்கள் உயர்வானவர்கள் என்ற எண்ணம்
அவர்களிடம் சிறிதளவு     இருந்திருந்தாலும் அது அழிந்துவிட்டது.
எல்லாவிதமான குழந்தைகளுடனும் தாராளமாகக்    கலந்துகொள்ள
அவர்கள் கற்றுக்கொண்டார்கள்; அவர்கள்       சோதிக்கப்பட்டுக்
கட்டுப்பாடுகளையும் பெற்றனர்.

     கெட்ட குழந்தைகளுடன் சேர்த்து   நல்ல குழந்தைகளுக்குப்
போதித்தால், அவர்களுடன் சேர்ந்திருக்கும்படி செய்தால்,   இந்தப்
பரீட்சை, பெற்றோர் அல்லது        போஷகரின் ஜாக்கிரதையான
கண்காணிப்பில் மாத்திரம் நடப்பதாக இருந்தால், நல்ல குழந்தைகள்
எதையும் இழந்துவிடுவதில்லை. இதுவும்       இதுபோன்ற மற்றச்
சோதனைகளும் இதையே          எனக்குக் காட்டியிருக்கின்றன.

     வெளிக்காற்றே படக்கூடாது         என்று குழந்தைகளைப்
பத்திரமாக  மூடிவைத்து வளர்த்துவிடுவதால் மாத்திரம், அவர்களை
ஆசாபாசங்களோ, தீமைகளோ பற்றாமல்    இருந்து விடுவதில்லை. ஆனால்,        பலவிதமான முறைகளில் வளர்க்கப்பட்ட சிறுவர்,
சிறுமிகளைச் சேர்த்துவைத்து அவர்களுக்குப்    போதிக்கும்போது
பெற்றோரும்       உபாத்தியாயர்களும் கடுமையான சோதனைக்கு
ஆளாகிறார்கள் என்பது           மாத்திரம் உண்மை. அவர்கள்
எப்பொழுதுமே உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது.

36 பிராயச்சித்தமாகப் பட்டினி

     பையன்களையும், பெண்களையும் சரியான வழியில் வளர்த்து
அவர்களுக்குக் கல்வி போதிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பது
நாளுக்கு நாள், மேலும் மேலும்    எனக்குத் தெளிவாகிக் கொண்டு