பக்கம் எண் :

கோகலேயைச்திக்க 413

Untitled Document
மாணவர்களின் தவறுக்கு உபாத்தியாயர்கள் பொறுப்பாளிகளாவார்கள்
என்பதில் மாத்திரம் சந்தேகமே இல்லை.

     முதல் பிராயச்சித்த விரதம்             எங்களில் யாருக்கும்
கஷ்டமானதாக இல்லை.     என்னுடைய வழக்கமான காரியங்களில்
எதையும் நான் நிறுத்தி வைக்கவோ,   நிறுத்திவிடவோ நேரவில்லை.
இந்தப் பிராயச்சித்தத் தவம் இருந்த காலம் முழுவதும்     நான் பழ
ஆகாரம் மட்டுமே சாப்பிட்டு வந்தேன்     என்பதை நினைவுபடுத்த
வேண்டும். இரண்டாவது உபவாச காலத்தின்   பிற்பகுதியில் எனக்கு
அதிகக் கஷ்டமாகவே இருந்தது.       ராம நாமத்தின் அற்புதமான
சக்தியை அச்சமயம்           நான் முற்றும் அறிந்திருக்கவில்லை.
கஷ்டத்தைச்      சகித்துக் கொள்ளுவதற்கு வேண்டிய சக்தி, அந்த
அளவுக்கு என்னிடம் குறைவாகவே இருந்தது.    அதோடு பட்டினி
விரதத்தின் முறைகளையும் நான் அப்பொழுது நன்கு அறிந்தவனல்ல.
பட்டினிக்காலத்தில் தண்ணீர் குடிப்பது,   எவ்வளவுதான் குமட்டலை
உண்டாக்குவதாகவும்        ருசியற்றதாகவும் இருந்தாலும், நிறையத்
தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியமானது    என்பதும் எனக்குத்
தெரியாது. மேலும்,       முதல் உண்ணாவிரதம் எளிதாக இருந்தது,
இரண்டாவது       உண்ணாவிரத விஷயத்தில் நான் அலட்சியமாக
இருக்கும்படி செய்துவிட்டது.       முதல் உண்ணாவிரதத்தின்போது
டாக்டர் கூனேயின் முறைப்படி நான் தினமும் குளித்து    வந்தேன்.
ஆனால், இரண்டாவது உண்ணாவிரதத்தின்போது, இரண்டு   மூன்று
நாட்களுக்குப் பிறகு அவ்வாறு குளிப்பதை விட்டுவிட்டேன். தண்ணீர்
குடிக்கப்  பிடிக்காததனாலும், குடித்தால் குமட்டல் உண்டாவதனாலும்
மிகக் குறைவாகவே தண்ணீர் குடித்தேன்.     இதனால், தொண்டை
வறண்டு பலவீனமாயிற்று. கடைசி நாட்களில்      மிகவும் மெல்லிய
குரலிலேயே என்னால் பேச முடிந்தது. என்றாலும்,     நான் செய்ய
வேண்டிய வேலைகளைச் செய்து வந்தேன்.       எழுத வேண்டிய
அவசியம் வந்தபோது, நான்   சொல்லிப் பிறரை எழுதச் செய்தேன்.
ராமாயணம் முதலிய சமய நூல்களைப் படிக்கச் சொல்லித் தவறாமல்
கேட்டு வந்தேன்.            அவசரமான காரியங்களைக் குறித்து
விவாதிப்பதற்கும்      ஆலோசனை கூறுவதற்கும் வேண்டிய பலம்
எனக்கு இருந்தது.

37 கோகலேயைச் சந்திக்க

     தென்னாப்பிரிக்கா பற்றிய நினைவுகள்   பலவற்றைக் கூறாமல்
விட்டுவிட்டே நான்           மேலே செல்ல வேண்டும். 1914-இல்
சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவடைந்த சமயம், லண்டன் வழியாக
இந்தியாவுக்குத் திரும்புமாறு கோகலே எனக்கு