பக்கம் எண் :

414சத்திய சோதனை

Untitled Document
அறிவித்திருந்தார். ஆகவே, ஜூலையில்      நானும் கஸ்தூரிபாயும்
கால்லென்பாக்கும் இங்கிலாந்துக்குப் பிரயாணமானோம்.

     சத்தியாக்கிரகத்தின்போது       மூன்றாம் வகுப்பு வண்டியில்
பிரயாணம் செய்ய ஆரம்பித்தேன்.              ஆகவே, இந்தப்
பிராயணத்திற்கும் மூன்றாம் வகுப்பிலேயே  ஏற்பாடு செய்திருந்தேன்.
ஆனால், இந்த வழியில் செல்லும் கப்பல்களில்  மூன்றாம் வகுப்பில்
இருக்கும் வசதிகளுக்கும், இந்தியாவில் கடலோரக்    கப்பல்களிலும்
ரெயில் வண்டிகளிலும் மூன்றாம் வகுப்பில் இருக்கும் வசதிகளுக்கும்
அதிகமான வித்தியாசம் உண்டு.      இந்தியாவிலிருக்கும் மூன்றாம்
வகுப்பில்       தூங்குவதற்கு மாத்திரமல்ல, உட்காருவதற்குக்கூடப்
போதுமான இடம் இல்லை. சுத்தமும் கிடையாது.   ஆனால், இதற்கு
மாறாக லண்டனுக்குச் சென்றபோது, கப்பலில்    மூன்றாம் வகுப்பில்
போதுமான இடவசதி இருந்ததோடு   சுத்தமாகவும் இருந்தது. கப்பல்
கம்பெனியாரும் எங்களுக்கு          விசேஷ வசதிகளைச் செய்து
கொடுத்தனர். கம்பெனியார்,        எங்களுக்கென்று தனிக் கக்கூசு
வசதியைச் செய்து கொடுத்தனர். நாங்கள் பழ    உணவு மாத்திரமே
சாப்பிடுகிறவர்களாகையால் பழங்களும்     கொட்டைப் பருப்புகளும்
மாத்திரம் எங்களுக்குக்          கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
வழக்கமாக மூன்றாம்          வகுப்புப் பிரயாணிகளுக்குப் பழமும்
கொட்டைகளும் தருவதில்லை.   இந்த வசதிகளெல்லாம் இருந்ததால்
எங்கள் பதினெட்டு நாள் கப்பல்       யாத்திரை சௌகரியமாகவே
இருந்தது.

     இப்பிரயாணத்தின்போது             நடந்த சில சம்பவங்கள்
குறிப்பிடத்தக்கவை. தொலைவிலுள்ளதைப்    பார்க்க உபயோகிக்கும்
‘பைனாக்குலர்’ என்ற தூரதிருஷ்டிக்           கண்ணாடிகளில் ஸ்ரீ
கால்லென்பாக்குக்கு விருப்பம் அதிகம்.         அவர் இரண்டொரு
விலையுயர்ந்த தூரதிருஷ்டிக் கண்ணாடிகள் வைத்திருந்தார். இவற்றில்
ஒன்றைக்குறித்து நாங்கள் தினமும் விவாதித்து வந்தோம். இவைகளை
வைத்துக்கொண்டிருப்பது,         நாங்கள் அடைய ஆசைப்பட்டுக்
கொண்டிருந்த எளிய வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பதை அவர்
உணரும்படி செய்யவேண்டும் என்று நான்   முயன்று வந்தேன். ஒரு
நாள் நாங்கள் எங்கள் அறையின் காற்றுத் துவாரத்திற்கு    அருகில்
நின்று பேசிக்கொண்டிருந்தபோது இந்த வாதம் உச்ச  நிலைக்குவந்து
விட்டது. “நமக்குள் இத்தகராறுக்கு இடம் தருவதாக        இத்தூர
திருஷ்டிக் கண்ணாடிகள் இருந்து  வருவதைவிட இவற்றைக் கடலில்
எறிந்துவிட்டு அதோடு ஏன் விவகாரத்தை   முடித்து விடக்கூடாது?”
என்றேன்.

     “இந்தச் சனியன்களை எறிந்தே விடுங்கள்”      என்றார் ஸ்ரீ
கால்லென் பாக்.

     “நான் சொல்லுவதும் அதுதான்” என்றேன்.