பக்கம் எண் :

கோகலேயைச்திக்க 415

Untitled Document
     “நானும் அதைத்தான் சொல்லுகிறேன்”  என்று  உடனே பதில்
சொன்னார் அவர்.

     அதை உடனே கடலில்          நான் வீசி எறிந்துவிட்டேன்.
அக்கண்ணாடியின் பெறுமானம் ஏழு பவுன்தான்.       ஆனால் ஸ்ரீ
கால்லென்பாக்குக்கு அதன்மீது இருந்த மோகத்தோடு     ஒப்பிட்டுப்
பார்த்தால் இந்த ஏழு பவுன்  மிகக் குறைவான விலை மதிப்புத்தான்.
என்றாலும் அதை விட்டொழித்த பிறகு அதற்காக அவர்   வருத்தப்
படவே இல்லை.

     ஸ்ரீ கால்லென்பாக்குக்கும்       எனக்கும் இடையே ஏற்பட்ட
சம்பவங்கள் பலவற்றுள் ஒன்றுதான் இது.

     நாங்கள் இருவரும் சத்திய      மார்க்கத்தில் செல்ல முயன்று
வந்ததால் இவ்விதமாக ஒவ்வொரு நாளும் நாங்கள்    ஏதாவது ஒரு
புதிய உண்மையை அறிந்து வந்தோம்.  சத்தியத்தை நாடிச் செல்லும்
போது கோபம், சுயநலம், துவேஷம்     முதலியன இயற்கையாகவே
நீங்கிவிடுகின்றன. ஏனெனில், அவை    நீங்காவிட்டால் சத்தியத்தை
அடைவது இயலாததாகும். ஒருவர் மிகவும்  நல்லவராக இருக்கலாம்;
உண்மையே பேசுகிறவராகவும்     இருக்கக் கூடும். ஆனால், காமக்
குரோத உணர்ச்சிகளுக்கு மாத்திரம்        வயப்பட்டவராக அவர்
இருந்தாராயின் சத்தியத்தை அவர் காணவே முடியாது. அன்பு பகை,
இன்பம்-துன்பம் ஆகிய இந்த  இரண்டு வகையானவைகளிலிருந்தும்
முற்றும்  விடுபடுவது ஒன்றே சத்தியத்தை வெற்றிகரமான வகையில்
தேடுவதாகும்.

     நாங்கள் இந்தக் கப்பல்     யாத்திரை புறப்பட்டபோது, நான்
உண்ணாவிரதமிருந்து      அதிக காலம் ஆகிவிடவில்லை. பழைய
பலத்தை நான் இன்னும் அடைந்துவிடவில்லை.  எனக்கு நல்ல பசி
எடுக்க வேண்டும் என்பதற்காகவும்,        சாப்பிட்டது ஜீரணமாக
வேண்டும் என்பதற்காகவும்,    தேகாப்பியாசம் இருக்கட்டும் எனக்
கருதிக் கப்பலின்     மேல் தளத்தில் கொஞ்சம் உலாவி வருவேன்.
ஆனால், இந்த நடையைக்கூட          என் உடல் தாங்கவில்லை.
கெண்டைக் கால்களில் வலி ஏற்பட்டுவிடும். ஆகவே, நான் லண்டன்
சேர்ந்தபோது என் தேக நிலை நன்றாக     இருப்பதற்குப் பதிலாக
மோசமாகவே இருந்தது. அங்கே   டாக்டர் ஜீவராஜமேத்தா எனக்கு
அறிமுகமானார். எனது உண்ணாவிரதத்தின் சரித்திரத்தையும், அதன்
பிறகு எனக்கு ஏற்பட்ட வலியைப் பற்றியும்    அவரிடம் கூறினேன்.
“சில தினங்களுக்கு நீங்கள் முழு ஓய்வு எடுத்துக்      கொள்ளாது
போனால் உங்கள் கால்கள் முற்றும் பயனற்றவைகளாகிவிடக் கூடும்”
என்று அவர் சொன்னார். நீண்ட உபவாசம்    இருந்து விட்ட பிறகு
இழந்த பலத்தைத்           திரும்பப் பெற அவசரப்படக் கூடாது,
பசியைக்கூடக்        கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை
அப்பொழுதுதான் நான்       அறிந்துகொண்டேன். உண்ணாவிரதம்