பக்கம் எண் :

416சத்திய சோதனை

Untitled Document
இருந்துகொண்டிருக்கும்போது இருப்பதை விட அதிக எச்சரிக்கையும்,
கட்டுத் திட்டங்களும் உண்ணாவிரதத்தை  நிறுத்துவதற்கு வேண்டும்.

     எந்த நேரத்திலும் பெரும் போர்   மூண்டுவிடக் கூடும் என்று
மடீராவில் நாங்கள் கேள்விப்பட்டோம்.      ஆங்கிலக் கால்வாயில்
எங்கள் கப்பல் போய்க் கொண்டிருந்தபோது       யுத்தமே மூண்டு
விட்டது என்ற செய்தி கிடைத்தது. எங்கள்     கப்பல் சிறிது காலம்
நிறுத்தி வைக்கப்பட்டது. ஆங்கிலக் கால்வாய் நெடுக நீர்   மூழ்கிக்
கப்பல்கள் கடற்கண்ணிகளைப் போட்டிருந்தன.    அவற்றில் மோதி
விடாமல் கப்பலை ஓட்டிச் செல்லுவது       எளிதான காரியமன்று.
ஆகவே, சௌதாம்டன்        போய்ச் சேர இரண்டு நாட்களாயின.

     யுத்தம் ஆகஸ்டு    நான்காம் தேதி பிரகடனமாயிற்று. நாங்கள்
ஆறாம் தேதி லண்டன் சேர்ந்தோம்.

38 போரில் என் பங்கு

     பாரிஸிலிருந்து லண்டனுக்குத் திரும்பி வர முடியாமல் கோகலே
சிக்கிக்கொண்டார் என்று நான்        லண்டன் போய்ச் சேர்ந்ததும்
அறிந்தேன். தேக சுகத்தை         முன்னிட்டு அவர் பாரிஸு க்குப்
போயிருந்தார்.              பாரிஸு க்கும் லண்டனுக்கும் இடையே
எல்லாப்  போக்குவரத்துமே      துண்டிக்கப்பட்டு விட்டதால் அவர்
எப்பொழுது திரும்புவார் என்பதைப் பற்றியும் எதுவும் தெரியவில்லை.
அவரைப் பார்க்காமல் இந்தியாவுக்குத் திரும்ப நான் விரும்பவில்லை.
ஆனால், அவர் எப்பொழுது  வருவார் என்பதையும் யாரும் சொல்ல
முடியவில்லை.

     இதற்கு மத்தியில் நான் என்ன செய்வது?   போர் சம்பந்தமாக
என் கடமை என்ன?               என்னுடைய சிறைத் தோழரும்
சத்தியாக்கிரகியுமான சோராப்ஜி அடாஜணியா,  அப்பொழுது வக்கீல்
தொழிலுக்காக லண்டனில் படித்துக்கொண்டிருந்தார்.    அவர் சிறந்த
சத்தியாக்கிரகிகளில் ஒருவராகையால்,      தென்னாப்பிரிக்காவுக்குத்
திரும்பியதும் என் ஸ்தானத்தை வகிப்பதற்காக       அவர் வக்கீல்
தொழிலுக்குப் படித்து வர இங்கிலாந்துக்கு    அனுப்பப்பட்டிருந்தார்.
அவருக்கு ஆகும் செலவுக்கு   டாக்டர் பிராண ஜீவன்தாஸ் மேத்தா
பணம் கொடுத்து வந்தார்.            அவருடனும் அவர் மூலமும்,
இங்கிலாந்தில் அப்பொழுது படித்துக் கொண்டிருந்த டாக்டர் ஜீவராஜ
மேத்தாவுடனும் மற்றவர்களுடனும்         நான் கலந்து பேசினேன்.
அவர்களுடன் கலந்து ஆலோசித்து, இங்கிலாந்திலும், அயர்லாந்திலும்
இருக்கும் இந்தியரின் கூட்டமொன்று கூட்டப்பட்டது. அக்கூட்டத்தின்
முன்பு என் கருத்தைத் தெரிவித்தேன்.

     இங்கிலாந்தில் வசித்துவரும்          இந்தியர், யுத்தத்திற்குத்
தங்களாலான உதவியைச் செய்யவேண்டும் என்று நான் கருதினேன்.