பக்கம் எண் :

போரில் என் பங்கு 417

Untitled Document
ஆங்கில மாணவர்கள் ராணுவத்தில் சேவை செய்யத் தொண்டர்களாக
முன்வந்திருக்கிறார்கள். அவ்வளவாவது இந்தியரும் செய்ய வேண்டும்.
இவ்விதமான என்வாதத்திற்குப் பலவிதமான ஆட்சேபங்கள் எழுந்தன.
இந்தியருக்கும் ஆங்கிலேயருக்கும்    எவ்வளவோ பேதம் இருக்கிறது
என்றார்கள். நாம் அடிமைகளாக         இருக்கிறோம். அவர்களோ
எஜமானர்கள் என்றார்கள்.     எஜமானனுக்குத் தேவைப்படும் நேரம்
வந்து விடும்போது மாத்திரம் ஓர் அடிமை    எஜமானனுடன் எப்படி
ஒத்துழைத்து விட முடியும்?         எஜமானனுக்கு ஏற்பட்டிருக்கும்
அவசியத்தைத் தனக்கு                  ஒரு வாய்ப்பாக அடிமை
பயன்படுத்திக்கொண்டு சுதந்திரமடையப்      பார்ப்பது அடிமையின்
கடமையல்லவா? இந்த வாதம் நியாயமானதாக அப்பொழுது எனக்குத்
தோன்ற வில்லை. இந்தியனுக்கும் ஆங்கிலேயனுக்கும்    அந்தஸ்தில்
இருக்கும் வித்தியாசத்தை நான் அறிவேன்.       ஆனால், அடிமை
நிலைக்கு நாம்      கொண்டு வரப்பட்டு விட்டோம் என்பதை நான்
நம்பவில்லை.           தவறுகளுக்கெல்லாம் தனிப்பட்ட பிரிட்டிஷ்
அதிகாரிகள்தான் காரணமே அன்றிப்       பிரிட்டிஷ் முறை அல்ல
என்றும், அவர்களையும் அன்பினால் மாற்றி விடலாம்  என்றும் நான்
எண்ணினேன். பிரிட்டிஷாரின்  ஒத்துழைப்பினாலும் உதவியினாலுமே
நமது அந்தஸ்தை நாம்        உயர்த்திக் கொள்ளுவதாக இருந்தால்,
அவர்களுக்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில்   அவர்களுக்குப்
பக்கத் துணையாக இருந்து          அவர்களுடைய தயவைப் பெற
வேண்டியது நமது கடமை.        பிரிட்டிஷ் முறையே தவறானதாக
இருந்தாலும், அது இன்று எனக்குத்       தோன்றுவதுபோல், சகிக்க
முடியாததாக அப்பொழுது      எனக்குத் தோன்றவில்லை. ஆனால்,
பிரிட்டிஷ்  முறையில் எனக்கு நம்பிக்கை இல்லாது போய் விட்டதால்
இன்று   நான் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கிறேன்
என்றால், பிரிட்டிஷ் ஆட்சி முறையில் மாத்திரமே     அன்றி அதன்
அதிகாரிகளிடமும் நம்பிக்கையை     இழந்துவிட்ட அந்த நண்பர்கள்
எப்படி ஒத்துழைப்பார்கள்?

     இந்தியர் கோரிக்கைகளைக்          குறித்துத் தைரியமாகக்
கூறுவதற்கும்,   இந்தியரின் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ளுவதற்கும்
ஏற்ற சமயம் அதுதான் என்று         என் யோசனையை எதிர்த்த
நண்பர்கள் கூறினார்கள். இங்கிலாந்தின் கஷ்டத்தை    நமக்கு ஏற்ற
வாய்ப்பாக மாற்றிக் கொண்டுவிடக்கூடாது என்று நான் எண்ணினேன்.
போர் நடந்துகொண்டிருக்கும் வரையில்      நமது கோரிக்கைகளை
வற்புறுத்தாமலிருப்பதே அதிக யோக்கியமானது, முன்யோசனையோடு
கூடியது என்றும் கருதினேன்.            ஆகையால், நான் கூறிய
யோசனையை வலியுறுத்தித்               தொண்டர்களாகச் சேர
முன்வருகிறவர்களை வருமாறு அழைத்தேன்.        அநேகர் முன்