பக்கம் எண் :

நோய்க்குச் சிகிச்சை 429

Untitled Document
     “இதுவே உங்கள் முடிவான தீர்மானமா?”    என்று கோகலே
கேட்டார்.

     “வேறுவிதமான முடிவுக்கு     நான் வருவதற்கில்லை என்றே
அஞ்சுகிறேன். என்னுடைய         இத்தீர்மானம் தங்களுக்கு மன
வருத்தத்தை உண்டாக்கும் என்பதை அறிவேன்  அதற்காக என்னை
மன்னிக்க வேண்டுகிறேன்” என்றேன்.

     கொஞ்சம் மனவருத்தத்துடன், ஆனால் மிகுந்த   அன்போடும்
கோகலே கூறியதாவது: “உங்கள்        தீர்மானம் சரி என்று நான்
ஒப்புக்கொள்ளுவதற்கில்லை. இதில்     ஆன்மிக அவசியம் எதுவும்
இருப்பதாகவும் நான் கருதவில்லை. ஆனால்,   மேற்கொண்டும் நான்
உங்களை வற்புறுத்த மாட்டேன்.” இவ்விதம்   என்னிடம் கூறிவிட்டு,
டாக்டர் ஜீவராஜ மேத்தாவைப் பார்த்து      அவர் சொன்னதாவது:
“தயவுசெய்து இனி அவரைத்      தொந்தரவு செய்யாதீர்கள். அவர்
தமக்கென வகுத்துக்கொண்டிருக்கும்  வரம்புக்கு உட்பட்டு அவருக்கு
உணவைப்பற்றிய ஏதாவது யோசனை கூறுங்கள்.”

     என் தீர்மானத்தைத் தாம் ஒப்புக்கொள்ளுவதற்கில்லை என்றார்,
டாக்டர். என்றாலும், அவர் வேறு எதுவும் செய்வதற்கில்லை. பச்சைப்
பயற்றுச் சூப்பில் கொஞ்சம் பெருங்காயம் போட்டுச்     சாப்பிடும்படி
அவர் எனக்கு யோசனை கூறினார். இதற்கு     நான் சம்மதித்தேன்.
இரண்டொரு நாள் அதைச் சாப்பிட்டேன்.    ஆனால்,  எனக்கிருந்த
வலி அதிகமாயிற்று. அது எனக்கு         ஒத்துக் கொள்ளவில்லை
என்பதைக் கண்டதும், திரும்பவும் பழங்களையும்  கொட்டைகளையும்
சாப்பிட ஆரம்பித்தேன். மேலுக்குச்      செய்து வந்த சிகிச்சையை
டாக்டர் தொடர்ந்து செய்துவந்தார். இதனால்,        வலி கொஞ்சம்
குறைந்தது. ஆனால், என்னுடைய       கட்டுப்பாடுகள் இடையூறாக
இருந்தன என்று அவர் எண்ணினார்.     இதற்கிடையில் லண்டனில்
அக்டோபர் மாத மூடுபனியைச்             சகிக்க முடியாததனால்
கோகலேதாய்நாட்டுக்குத் திரும்பினார்.

42 நோய்க்குச் சிகிச்சை

     நுரையீரலுக்கு அருகில் இருந்த    ரணத்தினால் ஏற்பட்ட என்
நோய், குணமாகாமல் இருந்துவந்தது,கொஞ்சம் கவலையை அளித்தது.
ஆனால், உள்ளுக்கு மருந்து  சாப்பிடுவதனால் இது குணமாவதில்லை
என்பதையும் உணவில் செய்து கொள்ளும் மாறுதல்களினாலும் வெளி
பரிகாரங்களினாலும் குணமாகும் என்பதையும் அறிவேன்.

     டாக்டர் அல்லின்ஸன் பிரபலமான சைவ உணவுவாதி. அவரை
அழைத்து வரச் செய்தேன். அவர் உணவு   மாறுதல்களின் மூலமே
பல நோய்களுக்குச் சிகிச்சை செய்துவந்தார். 1890-ஆம்