பக்கம் எண் :

430சத்திய சோதனை

Untitled Document
ஆண்டிலும் அவரைச் சந்தித்திருக்கிறேன். அவர்  என்னை முற்றும்
பரிசோதனை செய்து பார்த்தார். பால்  சாப்பிடுவதே இல்லை என்று
நான் விரதம் எடுத்துக்         கொண்டிருப்பதுபற்றியும் அவரிடம்
சொன்னேன். அவர்            என்னை  உற்சாகப்படுத்திவிட்டுச்
சொன்னதாவது: “நீங்கள் பால்       சாப்பிடவேண்டியதே இல்லை.
உண்மையில், சில நாட்களுக்கு நீங்கள் கொழுப்புச் சத்து எதையுமே
சாப்பிடக் கூடாது என்றே நான் விரும்புகிறேன்.” சாதாரணப் பழுப்பு
ரொட்டி,       பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம், மற்றும் கிழங்குகள்
போன்றவற்றைப் பச்சையாகவும்,      கீரைகளையும், பழங்களையும்
முக்கியமாக ஆரஞ்சுப் பழங்களையும்    சாப்பிட்டு வருமாறு அவர்
எனக்கு யோசனை கூறினார். கறிகாய்களைச்    சமைக்கக் கூடாது;
அப்படியே பச்சையாக மென்று தின்ன    என்னால் முடியாவிட்டால்
நுட்பமாகத் திருகி வைத்துக்கொண்டு சாப்பிடச் சொன்னார்.

     இதன்படி மூன்று நாட்கள் சாப்பிட்டேன்.   ஆனால், பச்சைக்
காய்கறிகள் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்தப்   பரீட்சையை
முற்றும் அனுசரித்துப் பார்க்கும் வகையில் என் உடல்நிலை இல்லை.
பச்சைக் கறிகாய்களைச் சாப்பிடுவதற்கு      எனக்குப் பயமாகவே
இருந்தது.

     அதோடு, என் அறையின்           சன்னல்களையெல்லாம்
எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கும்படியும்,     வெதுவெதுப்பான
நீரில்           குளிக்குமாறும், நோயுள்ள பகுதிகளில் எண்ணெய்
தடவித்தேய்க்கும் படியும், பதினைந்து நிமிடங்களிலிருந்து   முப்பது
நிமிட       நேரம் வரை திறந்த வெளியில் நடக்கு மாறும் டாக்டர்
அல்லின்ஸன் எனக்குக் கூறினார்.

     என் அறையின் சன்னல்கள்,      பிரெஞ்சு முறையிலானவை.
ஆகவே, முழுவதும் திறந்து வைத்துவிட்டால்     மழை நீரெல்லாம்
உள்ளே        வந்துவிடும். விசிறி போன்றிருந்த சன்னல் கதவைத்
திறக்கவே முடியவில்லை. ஆகவே, நல்ல காற்று   உள்ளே வரட்டும்
என்பதற்காக அதன் கண்ணாடிகளை உடைத்துவிட்டேன்.  மழை நீர்
உள்ளேவராத வகையில் ஒருவாறு சன்னலையும் திறந்து வைத்தேன்.
இந்த முறைகள் எல்லாம் ஓரளவுக்கு          என் தேக நிலையில்
அபிவிருத்தியை அளித்தன.               என்றாலும், பூரணமாகக்
குணமாகிவிடவில்லை.

     அச்சமயம் லேடி செஸிலியா      எப்பொழுதாவது என்னைப்
பார்க்க வருவதுண்டு. நாங்கள் நண்பர்களானோம்.       நான் பால்
சாப்பிடும்படி செய்துவிட வேண்டும் என்று அவர் மிகவும் முயன்றார்.
ஆனால், நான் பிடிவாதமாக மறுத்து விடவே பாலுக்குப்    பதிலாகச்
சாப்பிடக்கூடிய ஒன்றைத் தேடிப் பிடிப்பதற்காக அலைந்தார்.  பாலும்
தானியச் சத்தும் கலந்ததான