பக்கம் எண் :

434சத்திய சோதனை

Untitled Document
அறிந்தோ அறியாமலேயோ,        ஆங்கிலேயரின் உள்ளத்திற்குள்
இருந்திருக்கக் கூடும். அடிமைப்பட்ட    இனத்தினர் தாங்கள் என்ற
எண்ணம் இந்தியரின்     உள்ளத்திற்குள்ளும்  இருந்து இருக்கலாம்.
இத்தகைய சூழ்நிலையிலிருந்து விடுபட்டு      வீடு போய்ச் சேர்ந்து
விடவேண்டும் என்று நான் அதிக ஆர்வத்துடனிருந்தேன்.

     ஏடன் சேர்ந்ததுமே தாய்நாட்டுக்கு   வந்துவிட்டதைப் போன்ற
உணர்ச்சி எங்களுக்கு உண்டாயிற்று.     ஸ்ரீ கெகோபாத் காவாஸ்ஜி
தின்ஷா, ஏடனைச் சேர்ந்தவர். அவரை டர்பனில் சந்தித்திருக்கிறோம்.
அவருடனும் அவர் மனைவியோடும்           நெருங்கிப் பழகியும்
இருக்கிறோம். ஆகையால், ஏடன்     வாசிகளைப் பற்றி எங்களுக்கு
நன்றாகத் தெரியும்.

     சில தினங்களுக்கெல்லாம்     பம்பாய் வந்தடைந்தோம். பத்து
ஆண்டுகள் பிற நாடுகளில் இருந்துவிட்ட பின்பு    தாய் நாட்டிற்குத்
திரும்பியது பெரிய ஆனந்தமளித்தது.

     கோகலேயினுடைய யோசனையின் பேரில்  பம்பாயில் எனக்கு
வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார்கள்.    தமது தேக நிலை சரியாக
இல்லாதிருந்தும் கோகலேயும்   பம்பாய்க்கு வந்திருந்தார். அவரோடு
நான் ஐக்கியமாகி விடுவதன்மூலம்      கவலையற்றிருக்கலாம் என்ற
திடமான நம்பிக்கையுடனேயே நான்        இந்தியாவுக்கு வந்தேன்.
ஆனால், விதியோ முற்றும் வேறுவிதமாக இருந்துவிட்டது.

44 வக்கீல் தொழில் பற்றிய நினைவுகள்

     இந்தியாவில் என் வாழ்க்கை     எந்தப் போக்கில் போயிற்று
என்பதைப் பற்றி சொல்ல       ஆரம்பிக்கும் முன்பு, இதுவரையில்
வேண்டுமென்றே நான் கூறாமல்         இருந்துவந்திருக்கும் தென்
ஆப்பிரிக்கா பற்றிய மற்றும்      சில செய்திகளை ஞாபகப்படுத்திக்
கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

     வக்கீல் தொழிலைப் பற்றிய என்    நினைவுகளைக் கூறுமாறு
சில வக்கீல் நண்பர்கள் கேட்கிறார்கள்.     அத்தகைய நினைவுகள்
ஏராளமானவை. அவைகளையெல்லாம்   சொல்லுவதானால் அதுவே
ஒரு புத்தகமாகிவிடும். அது        என் நோக்கத்திற்கும் மாறானது.
ஆனால், அவைகளில் உண்மையைக்    கடைபிடிப்பது சம்பந்தமான
சில நினைவுகளை         மாத்திரம் கூறுவது தவறாக இல்லாமலும்
இருக்கக்கூடும்.

     எனக்கு நினைவிருக்கும் வரையில், எனது  வக்கீல் தொழிலில்
பொய்யை                 அனுசரித்ததே இல்லை என்று முன்பே
சொல்லியிருக்கிறேன். நான் நடத்திய     வழக்குகளில் பெரும் பகுதி
பொதுஜன நன்மைக்காக நடத்தப்பட்டது. என்      கையை விட்டுச்
செலவு செய்த  பணத்திற்கு அதிகமாக   அந்த வழக்குகளுக்கு நான்
பணம்    வாங்குவதே இல்லை. அவற்றில்கூட சில சமயங்களில் என்