பக்கம் எண் :

445

Untitled Document
     பார்ஸி ருஸ்தம்ஜி மீதிருந்த வழக்கில்     சமரசம் ஏற்பட்டது.
தீர்வை செலுத்தாமல் கடத்தியதாக          அவர் ஒப்புக்கொண்ட
தொகைக்கு இரு மடங்கான       தொகையை அவர் அபராதமாகச்
செலுத்தினார். இந்த வழக்குச் சம்பந்தமான   முழு விவரங்களையும்
அவர் எழுதினார். அப்படி எழுதியதைக் கண்ணாடி போட்டுத் தமது
அலுவலகத்தில் தொங்கவிட்டார்.       தமது சந்ததியாருக்கும் மற்ற
வியாபாரிகளுக்கும் நிரந்தரமான      எச்சரிக்கையாக இருக்கட்டும்
என்பதற்காகவே அவர் இவ்விதம் செய்தார்.

     செய்துவிட்ட குற்றத்திற்காகப் பார்ஸி   ருஸ்தம்ஜி வருந்துவது
தாற்காலிகமானதே அன்றி          நிரந்தரமானதாக இராது என்று
அவருடைய நண்பர்கள் என்னை     எச்சரிக்கை செய்தனர். இந்த
எச்சரிக்கையைக் குறித்து நான்       ருஸ்தம்ஜியிடம் கூறியபோது,
“உங்களை நான் ஏமாற்றினால் என்   கதி என்ன ஆவது?” என்று
கூறினார்.