பக்கம் எண் :

446சத்திய சோதனை

Untitled Document
ஐந்தாம் பாகம்

1 முதல் அனுபவம்

     நான் தாய்நாட்டிற்கு வந்து        சேருவதற்கு முன்னாலேயே
போனிக்ஸிலிருந்து புறப்பட்டவர்கள்     இந்தியா சேர்ந்து விட்டனர்.
நாங்கள் முதலில் போட்டிருந்த திட்டத்தின்படி நான் முன்னால் வந்து
சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், யுத்தம்  காரணமாக இங்கிலாந்தில்
எனக்கு ஏற்பட்ட வேலைகளினால் எங்கள்       திட்டங்களெல்லாம்
மாறிவிட்டன. இந்தியாவுக்கு எப்பொழுது போவேன்   என்ற நிச்சயம்
இல்லாமல் நான்         இங்கிலாந்தில் இருக்கவேண்டி வந்தபோது,
போனிக்ஸிலிருந்து வந்தவர்களுக்கு             இந்தியாவில் இடம்
தேடவேண்டிய பிரச்னை எனக்கு ஏற்பட்டது.       சாத்தியமானால்,
அவர்கள் எல்லோரும் இந்தியாவில் ஒரே          இடத்தில் தங்கி,
போனிக்ஸில் நடத்தியதைப் போன்ற வாழ்க்கையை நடத்த வேண்டும்
என்று விரும்பினேன். நான்       அவர்களைப் போய்த் தங்கும்படி
சொல்லுவதற்கு ஏற்ற ஆசிரமம்    எதுவும் இருந்ததாகவும் எனக்குத்
தெரியாது. ஆகையால், ஸ்ரீ ஆண்டு ரூஸைச் சந்தித்து அவர் கூறுகிற
யோசனையின்படி நடந்து கொள்ளுமாறு       அவர்களுக்குத் தந்தி
கொடுத்தேன்.

     ஆகவே, ஸ்ரீ ஆண்ட்ரூஸ், அவர்களை   முதலில் கங்கிரி குரு
குலத்திற்கு அழைத்துச் சென்றார்.            காலஞ்சென்ற சுவாமி
சிரத்தானந்தர், அவர்களை                அங்கே தமது சொந்தக்
குழந்தைகளாகவே கருதி நடத்தினார். அதன் பிறகு அவர்கள் சாந்தி
நிகேதன ஆசிரமத்தில் தங்கினார்கள். அங்கும், கவியும்  அவருடைய
ஆட்களும், அதேபோல் அவர்கள்மீது      அன்பைப் பொழிந்தனர்.
இந்த இரண்டு இடங்களிலும்        அவர்கள் பெற்ற அனுபவங்கள்,
அவர்களுக்கும் எனக்கும் அதிக உதவியாக இருந்தன.

     கவி ரவீந்திரர், சிரத்தானந்தஜி,       தலைமைப் பேராசிரியர்
சுசீல்ருத்ரா ஆகிய மூவரும் ஆண்டுரூஸின்   திரிமூர்த்திகள் என்று
நான் அடிக்கடி அவரிடம் கூறுவது   உண்டு. தென்னாப்பிரிக்காவில்
இருந்தபோது அவர்களைப்பற்றிப் பேசுவதென்றால்  ஸ்ரீ ஆண்டுரூஸ்
சலிப்படைவதே இல்லை.   தென்னாப்பிரிக்காவைப் பற்றிய   எனது
இனிய        நினைவுகளில் இந்தத் திரிமூர்த்திகளைக் குறித்து ஸ்ரீ
ஆண்டுரூஸ் இரவு பகலாக என்னிடம் பேசியவை   அதிக இனிமை
உடையனவாகும். அவை என் உள்ளத்தில் அப்படியே     பதிந்தும்
இருந்தன. இயற்கையாகவே ஸ்ரீ ஆண்டுரூஸ்,     போனிக்ஸிலிருந்து
வந்தவர்களைத் தலைமைப் பேராசிரியர் ருத்ராவுக்குப் பழக்கப்படுத்தி
வைத்தார்.     அவருக்குத் தனி ஆசிரமம் இல்லை. ஆனால், தமது
வீட்டையே போனிக்ஸிலிருந்து வந்த குடும்பத்தினர் தங்கு