பக்கம் எண் :

458சத்திய சோதனை

Untitled Document
என் மனைவியோடும் மகன்லாலுடனும் புனாவுக்குப்   புறப்பட்டேன்.
மற்றவர்கள் எல்லோரும் சாந்திநிகேதனத்திலேயே    தங்கினார்கள்.

     ஆண்டுரூஸ், பர்த்வான் வரையில்        என்னுடன் வந்தார்.
“இந்தியாவில் சத்தியாக்கிரகத்தை நடத்துவதற்கு  ஒரு சமயம் வரும்
என்று நீங்கள் நினைக்கிறீர்களா?      அப்படி வருமென்றால் அது
எப்பொழுது வரும்          என்பது குறித்து உங்களுக்கு ஏதாவது
தோன்றுகிறதா?” என்று அவர் என்னைக் கேட்டார்.

     நான் கூறியதாவது: “இதற்குப்     பதில் சொல்லுவது கஷ்டம்.
ஏனெனில், ஓர் ஆண்டுக்கு        நான் எதுவும் செய்வதற்கில்லை.
கோகலே என்னிடம் ஒரு வாக்குறுதி   வாங்கியிருக்கிறார். அனுபவம்
பெறுவதற்காக நான் இந்தியாவில்        சுற்றுப் பிரயாணம் செய்ய
வேண்டும்; அது முடியும் வரையில் பொது விஷயங்களைக்  குறித்து
நான்    எந்தவிதமான அபிப்பிராயமும் கூறக்கூடாது என்பது அவர்
என்னிடம் வாங்கிய வாக்குறுதி. அந்த      ஓராண்டு முடிந்துவிட்ட
பிறகும்கூட, என் கருத்துக்களை            வெளியிடுவதற்கு நான்
அவசரப்படப் போவதில்லை. ஆகையால்,      ஐந்தாண்டுகளுக்கோ
அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கோ,  சத்தியாக்கிரகத்திற்கான
சமயம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.”

     இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு          விஷயத்தைக் குறிப்பிட
விரும்புகிறேன். ‘ஹிந்த் சுயராஜ்’ (இந்திய சுயராஜ்யம்) என்ற நூலில்
நான் வெளியிட்டிருந்த சில கருத்துக்களைக்    குறித்துக் கோகலே
சிரிப்பது வழக்கம். “நீங்கள் இந்தியாவில் ஓராண்டு    தங்கியிருந்த
பிறகு உங்கள் கருத்துக்கள் தாமாகத் திருந்தி  விடும்” என்று அவர்
கூறுவார்.

5 மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் துயரங்கள்

     மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள்,           டிக்கெட்டுகளை
வாங்குவதற்கும்கூட என்ன     கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்க
வேண்டியிருக்கிறது என்பதைப் பர்த்வானில் நாங்கள்  நேரில் காண
நேர்ந்தது. மூன்றாம்            வகுப்பு டிக்கெட்டுகளை இதற்குள்
கொடுக்கமுடியாது என்று எங்களுக்குச் சொல்லிவிட்டனர்.ஸ்டேஷன்
மாஸ்டரைக் கண்டுபிடிப்பது      கஷ்டமாக இருந்தாலும் அவரைப்
போய்ப் பார்த்தேன். அவர் இருக்கும்     இடத்தை யாரோ ஒருவர்
எனக்கு அன்புடன் காட்டினார். எங்களுக்கு    இருந்த கஷ்டத்தை
ஸ்டேஷன் மாஸ்டரிடம் எடுத்துக் கூறினேன்.       அவரும் அதே
பதிலைத்தான் சொன்னார்.         டிக்கெட் கொடுக்கும் இடத்தின்
சன்னலைத் திறந்ததும் டிக்கெட்டுகளை      வாங்குவதற்கு அங்கே
சென்றேன். ஆனால்         டிக்கட்டுகளை வாங்குவது அவ்வளவு
எளிதான காரியமாக இல்லை. அங்கே வல்லவன் வகுத்ததே