பக்கம் எண் :

சாந்திநிகேதனம்457

Untitled Document
இந்த வேலையைச் சுலபமாக ஏற்றுக்  கொண்டு விடுவார்கள் என்று
எதிர்பார்த்துவிட முடியாது. தினமும்    விவாதங்கள் நடந்துவந்தன.
சிலர் சீக்கரத்திலேயே           சோர்வடைந்து விட்டனர் என்பது
தெரிந்தது.ஆனால், அப்படிச்      சோர்ந்துவிடக் கூடியவர் அன்று
பியர்ஸன். எப்பொழுதும்             புன்னகை பூத்த முகத்துடன்
சமையலறையிலோ, அதன் பக்கத்திலோ       அவர் ஏதாவது ஒரு
வேலையைச் செய்து        கொண்டிருப்பதைக் காணலாம். பெரிய
பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்யும்        வேலையை அவர்
மேற்கொண்டார்.      பாத்திரங்களைத் துலக்குகிறவர்களுக்கு அந்த
வேலையில் சலிப்புத் தோன்றாமல் இருப்பதற்காகச் சில மாணவர்கள்
அவர்களுக்கு         முன்னால் சித்தார் வாத்தியம் வாசிப்பார்கள்.
எல்லோருமே இந்த வேலையில்       உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.
தேனீக்கள் சுறுசுறுப்பாக இருக்கும் தேன் கூடுபோல்      இருந்தது,
சாந்திநிகேதனம்.

     இத்தகைய மாறுதல்கள்     ஒரு முறை ஆரம்பமாகிவிட்டால்
எப்பொழுதும்           வளர்ந்துகொண்டே இருக்கும். போனிக்ஸ்
கோஷ்டியினர் தாங்களே சமைத்துக்கொண்டனர்.அவர்கள் சாப்பாடு
மிகவும் எளிமையாகவும் இருந்தது. மசாலைச் சாமான்களே  அந்தச்
சாப்பாட்டில் இல்லை. அரிசி, பருப்பு, கறிகாய்    மாத்திரமேயன்றிக்
கோதுமைமாவுகூட, ஒரே சமயத்தில் ஒரே பாத்திரத்தில்  நீராவியில்
சமைக்கப்பட்டன.             வங்காளிச் சமையலில் சீர்திருத்தம்
செய்வதற்காகச் சாந்தி   நிகேதனத்தின் பையன்கள் அதே போன்ற
சமையலைத் தொடங்கினார்கள். இரண்டொரு   உபாத்தியாயர்களும்
சில மாணவர்களும் இச்சமையலைச் செய்து வந்தார்கள்.

     கொஞ்ச காலத்திற்குப் பிறகு      இப்பரீட்சை நிறுத்தப்பட்டு
விட்டது. பிரபலமான இந்த ஸ்தாபனம்,         மத்தியில் கொஞ்ச
காலத்திற்கு இந்தப் பரீட்சையை நடத்தியதால்       அதற்கு எந்த
விதமான நஷ்டமும் இல்லை என்பதே என் அபிப்பிராயம். இதனால்
ஏற்பட்ட           சில அனுபவங்கள்    உபாத்தியாயர்களுக்குப்
பயனுள்ளதாகவே இருந்திருக்க முடியும்.

     சாந்திநிகேதனத்தில் கொஞ்ச    காலம் தங்கவேண்டும் என்று
விரும்பினேன். ஆனால்,    விதியோ வேறுவிதமாக இருந்துவிட்டது.
நான் அங்கே வந்து        ஒரு வாரம்கூட ஆகவில்லை. இதற்குள்
கோகலே காலமாகிவிட்டார் என்று புனாவிலிருந்து   எனக்குத் தந்தி
வந்தது. சாந்திநிகேதனம் துக்கத்தில் ஆழ்ந்தது.   அங்கிருந்தவர்கள்
எல்லோரும் என்னிடம் வந்து துக்கம் விசாரித்தார்கள்.  தேசத்திற்கு
ஏற்பட்ட நஷ்டத்தைக் குறித்துத் துக்கப்படுவதற்காக   ஆசிரமத்தின்
கோயிலில் ஒரு விஷேசக் கூட்டம் நடந்தது.     மிகுந்த பக்தியுடன்
அது நடந்தது. அன்றே நான்