பக்கம் எண் :

456சத்திய சோதனை

Untitled Document
தம்முடைய புகழ்மணம் சாந்தி நிகேதனம்   முழுவதிலும் கமழும்படி
செய்திருந்ததைக் கண்டேன்.

     ஆண்டுரூஸ்  அங்கே இருந்தார்.       பியர்ஸனும் இருந்தார்.
வங்காளி ஆசிரியர்களில்           ஜகதானந்த பாபு, நேபால் பாபு,
சந்தோஷ்பாபு, க்ஷிதிமோகன் பாபு, நாகேன் பாபு,    சரத் பாபு, காளி
பாபு ஆகியவர்களுடன் ஓரளவுக்கு நெருங்கிய பழக்கம்  எங்களுக்கு
ஏற்பட்டது.

     என்னுடைய வழக்கப்படி அங்கே இருந்த  ஆசிரியர்களுடனும்
மாணவர்களுடனும் நான்      சீக்கிரத்தில் ஒன்றிப் போய்விட்டேன்.
அவரவர்களின் காரியங்களை    அவர்களே செய்துகொள்ளுவதைக்
குறித்து அவர்களுடன் விவாதித்தேன்.       ஆசிரியர்களுக்கு ஒரு
யோசனை கூறினேன்.               சம்பளத்திற்கு வைத்திருக்கும்
சமையற்காரர்களை  அனுப்பிவிட்டு ஆசிரியர்களும் மாணவர்களுமே
தங்கள் உணவைச் சமைத்துக்     கொள்ளுவதானால், சிறுவர்களின்
உடலுக்கும் ஒழுக்கத்துக்கும்       ஏற்ற வகையில் சமையலறையை
நிர்வகிக்க        ஆசிரியர்களால் முடியும் என்றேன். இது, தங்கள்
காரியங்களைத்       தாங்களே செய்துகொள்ளவேண்டும் என்பதில்
மாணவருக்கு ஓர் அனுபவப் பாடமாகவும்      இருக்கும் என்றேன்.
ஆசிரியர்களில் இரண்டொருவர், அது      ஆகாத காரியம் என்று
தலையை அசைத்தார்கள். சிலர்,      என் யோசனையைப் பலமாக
ஆதரித்தார்கள்.    சிறுவர்களும் அதை வரவேற்றனர். புதுமையான
காரியங்களில் சுபாவமாகச்        சிறுவர்களுக்கு இருக்கும் ருசியே
இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆகவே, நாங்கள் இப்பரீட்சையில்
இறங்கினோம். இதுபற்றித் தமது கருத்தைத் தெரிவிக்குமாறு  கவியை
நான் கேட்டதற்கு, அதை ஆசிரியர்கள்      ஆதரிப்பதாயிருந்தால்
தமக்கு    ஆட்சேபமில்லை என்று கூறினார். “இந்தச் சோதனையில்
சுய ராஜ்யத்தின் திறவுகோல் அடங்கியிருக்கிறது”      என்று அவர்
சிறுவர்களிடம் கூறினார்.

     இந்தப் பரீட்சை வெற்றி பெறவேண்டும்     என்பதற்காக ஸ்ரீ
பியர்ஸன் தமது            உடலை வருத்திப் பாடுபட்டார்; அதிக
உற்சாகத்தோடு இவ்வேலைகளில் ஈடுபட்டார்.        காய்கறிகளை
நறுக்குவதற்கு ஒரு கோஷ்டி, தானியத்தைச் சுத்தம் செய்வதற்கு ஒரு
கோஷ்டி என்று இவ்விதம் ஒவ்வொரு     வேலைக்கும் ஒவ்வொரு
கோஷ்டி     அமைக்கப்பட்டது. சமையலறையையும் அதன் சுற்றுப்
புறங்களையும் சுத்தமாக வைத்திருக்கும் வேலையை நாகேன்பாபுவும்
மற்றவர்களும் மேற்கொண்டனர்.        கையில் மண்வெட்டியுடன்
அவர்கள் வேலை செய்வதைப் பார்க்க      எனக்கு ஆனந்தமாக
இருந்தது.

     அங்கே நூற்றிருபத்தைந்து       பையன்களும் அவர்களின்
ஆசிரியர்களும் இருந்தனர். அவர்கள் எல்லோரும், உடலுழைப்பான