பக்கம் எண் :

நயந்துகொள்ள முயற்சி 461

Untitled Document
உதவியை ஏற்றுக்கொள்ள நான் தயங்கினேன்.  இரண்டாம் வகுப்புப்
பிரயாணிகள் குளிக்குமிடத்தை        உபயோகித்துக்கொள்ள என்
மனைவிக்கு உரிமை இல்லை      என்பதை அறிவேன். என்றாலும்,
முறையற்ற அச்செய்கைக்கு      முடிவில் நானும் உடந்தையானேன்.
சத்தியத்தை அனுசரிப்பவருக்கு        இது அழகல்ல என்பதையும்
அறிவேன். அந்த ஸ்நான        அறைக்குப் போய்த்தான் குளிக்க
வேண்டும் என்று     என் மனைவிக்கு ஆவலும் இல்லை. ஆனால்,
சத்தியத்தினிடம் இருந்த பற்றை,      மனைவியினிடம் கணவனுக்கு
இருந்த பாசம் வென்றுவிட்டது.      சத்தியத்தின் முகம், மாயையின்
தங்கத்திரையினால் மூடப்பட்டிருக்கிறது என்று  உபநிடதம் கூறுகிறது.

6 நயந்துகொள்ள முயற்சி

     நாங்கள் புனா               வந்து சேர்ந்தோம். சிரார்த்தச்
சடங்குகளெல்லாம் முடிந்த பிறகு       இந்திய ஊழியர் சங்கத்தின்
எதிர்காலத்தைக் குறித்தும் விவாதங்கள்    எழுந்தன. அச்சங்கத்தில்
நான் அங்கத்தினனாவது          என்ற விஷயம் எனக்கு மிகவும்
சங்கடமான பிரச்னையாக இருந்தது. கோகலே இருந்த போது அதில்
அங்கத்தினன் ஆவதற்கு      நான் முற்பட வேண்டிய அவசியமே
இல்லை. அவர் விருப்பம் எதுவோ அதை    அப்படியே பணிவுடன்
நிறைவேற்றி வந்திருப்பேன். அத்தகையதோர் நிலையில்     இருக்க
வேண்டும் என்பதுதான் என் பிரியமும். இந்தியப் பொது  வாழ்க்கை
என்ற கொந்தளிப்பான கடலில்   பிரயாணம் செய்வதற்குச்  சரியான
மாலுமி ஒருவர்      எனக்குத் தேவைப்பட்டார். கோகலேயை நான்
அத்தகைய மாலுமியாகக் கொண்டிருந்ததோடு,      அவர் இருக்கப்
பயமில்லை என்ற      தைரியத்துடனும் இருந்தேன். இப்பொழுதோ,
அவர் போய்விட்டதால் என்    சக்தியைக் கொண்டே நான் இருக்க
வேண்டியவனாகிவிட்டேன். ஆகவே அச்சங்கத்தில் அங்கத்தினனாகி
விட வேண்டியது    என் கடமை என்பதை உணர்ந்தேன். அப்படிச்
செய்தால் கோகலேயின் ஆன்மாவும்       திருப்தியடையும் என்று
எண்ணினேன். ஆகவே,        தயக்கம் எதுவும் இல்லாமல், அதே
சமயத்தில் உறுதியுடனும், அச்சங்கத்தின் அங்கத்தினர்களை  நயந்து
கொள்ளும் முயற்சியில் இறங்கினேன்.

     இச்சமயத்தில்               அச்சங்கத்தின் அங்கத்தினரில்
பெரும்பாலானவர்கள் புனாவில் இருந்தார்கள்.  என்னைச் சேர்த்துக்
கொள்ளுமாறு அவர்களைக்       கேட்டுக்கொண்டேன். என்னைக்
குறித்து   அவர்களுக்கு இருந்த பயத்தையெல்லாம் போக்குவதற்கும்
முயன்றேன். ஆனால், என்னைச் சேர்த்துக் கொள்ளும் விஷயத்தில்
அவர்களிடையே          பிளவு இருந்தது என்பதைக் கண்டேன்.
அவர்களில் ஒரு பகுதியினர், என்னைச்   சேர்த்துக்கொள்ளுவதற்கு