பக்கம் எண் :

462சத்திய சோதனை

Untitled Document
ஆதரவாக இருந்தார்கள். மற்றொரு பகுதியினரோ, அதைப் பலமாக
எதிர்த்து வந்தனர்.       என்னிடம் கொண்டிருந்த அன்பில் இந்த
இருசாராரும்          ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல
என்பதையும் நான் அறிவேன்.           ஆனால், சங்கத்தினிடம்
அவர்களுக்கு இருந்த விசுவாசம்,           என்னிடம் அவர்கள்
கொண்டிருந்த   அன்பைவிட அதிகமாக இருந்திருக்கலாம்; என்மீது
கொண்ட அன்பை            விடக் குறைவாகவாவது இல்லாமல்
இருந்திருக்கும். ஆகையால், எந்த விதமான   மனக்கசப்புமின்றியே
விவாதித்து வந்தோம். அந்த விவாதம்   முழுவதும் கொள்கையைப்
பற்றியதாகும். என்னை அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளுவதை
எதிர்த்தவர்கள், அநேக        விஷயங்களில் நானும் அவர்களும்
வடதுருவம் தென்துருவம் போல்   வெகு தொலைவில் இருப்பதாகக்
கூறினர். என்னை அங்கத்தினனாகச் சேர்த்துக்  கொண்டு விட்டால்,
எந்த நோக்கத்திற்காக அச்சங்கம்     ஆரம்பிக்கப்பட்டதோ அந்த
நோக்கத்திற்கே     ஆபத்து நேர்ந்துவிடும் என்று எண்ணினார்கள்.
இயற்கையாகவே இத்தகைய        ஆபத்தை அவர்களால் தாங்க
முடியாதுதான்.

     நீண்ட நேரம் விவாதித்த பிறகு நாங்கள்  கலைந்து விட்டோம்.
முடிவான தீர்மானத்திற்கு வரும் விசயம்    பிந்திய தேதிக்கு ஒத்தி
வைக்கப்பட்டு விட்டது.

     அதிகப் பரபரப்பு அடைந்துவிட்ட   நிலையிலேயே நான் வீடு
திரும்பினேன்.        பெரும்பான்மை வோட்டுக்களின் மூலம் நான்
அங்கத்தினனாகச்     சேர்த்துக்கொள்ளப்படுவது எனக்குச் சரியா?
கோகலேயிடம் நான் கொண்டிருந்த பக்திக்கு அது பொருத்தமானதாக
இருக்குமா? ஒரு விஷயம் எனக்குத் தெளிவாகத்       தோன்றியது.
என்னை அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளுவதில் அச்சங்கத்தின்
அங்கத்தினர்கள் இடையே          அபிப்பிராய பேதம் இவ்வளவு
கடுமையாக      இருக்கும்போது, சேர்த்துக்கொள்ளக் கோரும் என்
மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டு    என்னை எதிர்ப்பவர்களுக்கு
இருக்கும் சங்கடத்திலிருந்து அவர்களைத் தப்புவிப்பது ஒன்றே நான்
செய்யக்கூடிய                சரியான காரியம்.  சங்கத்தினிடமும்
கோகலேயிடத்திலும் நான் கொண்டிருந்த பக்திக்கு   ஏற்ற காரியமும்
அதுதான் என்று      எண்ணினேன். இந்த யோசனை பளிச்சென்று
எனக்குத் தோன்றியதும், ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தைக்  கூட்டவே
வேண்டாம் என்று உடனே       ஸ்ரீ சாஸ்திரிக்கு எழுதினேன். என்
மனுவை எதிர்த்தவர்கள்,        நான் செய்த தீர்மானத்தை முற்றும்
பாராட்டினர். இது,    ஒரு சங்கடமான நிலையிலிருந்து அவர்களைக்
காப்பாற்றியது.          எங்களுக்குள் நட்பையும் இன்னும் அதிகப்
பலமானதாக்கியது. மனுவை           வாபஸ் வாங்கிக் கொண்டது,
உண்மையில் என்னை