பக்கம் எண் :

468சத்திய சோதனை

Untitled Document
இயல்பானது. என் வாழ்க்கையே        கட்டுத் திட்டங்களடங்கிய
முடிவுகளை         அடிப்படையாகக் கொண்டது. கல்கத்தாவிலும்
ரங்கூனிலும் நான் தங்கிய வீட்டினர்    ஏராளமாகச் செலவு செய்து
எனக்கு விருந்தளித்தார்கள். அவர்களுக்கு   நான் அனாவசியமான
தொந்தரவுகளைக் கொடுத்து விட்டதாக எண்ணினேன்.  ஆகையால்,
என் ஆகாரத்தில்      இத்தனை பண்டங்களைத் தான் சாப்பிடுவது
என்று கட்டுப்படுத்திக்      கொள்ளுவதோடு கடைசிச் சாப்பாட்டை
இருட்டுவதற்கு முன்னால் முடித்துக்       கொண்டுவிடுவது என்றும்
தீர்மானித்தேன். எனக்கு இத்தகைய தடைகளை    நானே விதித்துக்
கொள்ளாவிட்டால், இனி என்னை       அதிதியாக ஏற்பவர்களுக்கு
அநேக இடைஞ்சல்களை நான் உண்டாக்க நேரும். சேவையில் நான்
ஈடுபடுவதற்கு மாறாக அவர்களை     எனக்குச் சேவை செய்வதில்
ஈடுபடுத்திக்கொள்ளவும் வேண்டி வரும்.   ஆகையால், இந்தியாவில்
இருக்கும்போது இருபத்து         நான்கு மணி நேரத்தில் ஐந்துக்கு
அதிகமான பொருள்களை நான் சாப்பிடுவதில்லை என்றும், இருட்டிய
பிறகு      சாப்பிடுவதில்லை என்றும் விரதம் எடுத்துக்கொண்டேன்.
இதனால் எனக்கு ஏற்படக்கூடிய      கஷ்டங்களைக் குறித்துத் தீரச்
சிந்தித்தேன். ஆனால், இதில்  எந்தவிதச் சந்தேகத்திற்கும் பின்னால்
இடம் வைத்துவிட நான் விரும்பவில்லை.   நான் நோய் வாய்ப்பட்டு,
மருந்தும் உணவுப் பொருள்களில் ஒன்றாகி, அச்சமயம் விசேஷமாகச்
சாப்பிடவேண்டிய ஆகாரத்திற்காக விதி விலக்கு  எதுவும் செய்யாது
போனால், அப்பொழுது என்ன ஆகும்        என்பதைக் குறித்தும்
யோசித்தேன். என்ன வானாலும் சரி,    இந்த விரதத்திலிருந்து எந்த
விதிவிலக்கும் செய்து கொள்ளுவதில்லை         என்று முடிவாகத்
தீர்மானித்துக் கொண்டேன்.

     இந்த விரதத்தை இப்பொழுது நான் பதின்மூன்று ஆண்டுகளாக
அனுசரித்து வருகிறேன். இதனால்        எனக்குப் பல கஷ்டங்கள்
ஏற்பட்டதும் உண்டு. ஆயினும்          இந்த விரதம்    எனக்குப்
பாதுகாப்பாகவும் இருந்தது என்பதை நிச்சயமாகக் கூற முடியும்.  இது
என் வாழ்நாட்களில் சில ஆண்டுகளை அதிகமாக்கியது; நான் பற்பல
நோய்களுக்கு  உள்ளாகாதவாறும் என்னைக் காப்பாற்றியது என்பதே
என் அபிப்பிராயம்.

8 லட்சுமணன் பாலம்

     ஹரித்துவாரத்திலிருந்து மகாத்மா      முன்ஷிராம்ஜியின் குரு
குலத்திற்குச் சென்று ஆஜானுபாகுவான      அவரைச் சந்தித்ததில்
எனக்கு மன ஆறுதல் ஏற்பட்டது.  குருகுலத்திலிருந்த அமைதிக்கும்
ஹரித்துவாரத்திலிருந்த          இரைச்சலுக்கும் இடையே இருந்த
அற்புதமான வித்தியாசத்தை     அங்கே சென்றதுமே உணர்ந்தேன்.