பக்கம் எண் :

லட்சுமணன் பாலம்469

Untitled Document
     மகாத்மா தமது அன்பினால் என்னை ஆட்கொண்டும் விட்டார்.
பிரம்மச்சாரிகள், எனக்கு வேண்டிய    வசதிகளையெல்லாம் செய்து
கொடுத்தார்கள்.        இங்கேதான் முதன் முதலில் ஆச்சாரிய ராம
தேவஜியைச் சந்தித்தேன். அவரிடம் எவ்வளவு    அபாரமான சக்தி
இருந்தது என்பதை            உடனேயே கண்டுகொண்டேன். பல
விஷயங்களிலும் நாங்கள் மாறுபட்ட  கருத்துடையவர்கள். என்றாலும்,
எங்கள் பழக்கம், சீக்கிரத்திலேயே நட்பாகக் கனிந்தது.  குருகுலத்தில்
கைத்தொழில்     பயிற்சியை ஆரம்பிப்பதன் அவசியத்தைக் குறித்து
ஆச்சாரிய ராமதேவஜியுடனும் மற்றப்     பண்டிதர்களுடனும் நீண்ட
நேரம் விவாதித்தேன். அங்கிருந்து   புறப்பட்டுவிட வேண்டிய நேரம்
வந்தபோது பிரிவது மனத்திற்கு     அதிக வருத்தமாகவே இருந்தது.

     லட்சுமணஜூலாவைப் (கங்கைமீது போடப்பட்டிருந்த தொங்கும்
பாலம்) பற்றிப் பலர்      புகழ்ந்து பேச நான் கேட்டிருந்தேன். இது
ரிஷீகேசத்திலிருந்து கொஞ்ச         தூரத்தில் இருக்கிறது. அந்தப்
பாலத்தைப் போய்ப் பார்க்காமல்     ஹரித்துவாரத்திலிருந்து திரும்பி
விடவேண்டாம் என்று பல நண்பர்கள் என்னிடம்       வற்புறுத்திச்
சொன்னார்கள். நடந்துபோயே         இந்த யாத்திரையை முடிக்க
விரும்பினேன். ஆகையால், மத்தியில்          ஓர் இடத்தில் தங்கி
அங்கேபோய்ச் சேர்ந்தேன்.

     ரிஷீகேசத்தில் சந்நியாசிகள் பலர்         என்னைப் பார்க்க
வந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னிடம்      அதிக அபிமானம்
கொண்டிருந்தார். போனிக்ஸ்     கோஷ்டியினர் அங்கே இருந்தனர்.
அவர்களைக் குறித்து அந்தசுவாமி       என்னைப் பல கேள்விகள்
கேட்டார். சமய சம்பந்தமாக நாங்கள் விவாதித்தோம். அதில் இருந்து
சமய சம்பந்தமான சிரத்தை எனக்கு     அதிகம் உண்டு என்பதைத்
தெரிந்துகொண்டார். கங்கையில்             நீராடிவிட்டு உடம்பில்
சட்டையில்லாமல், தலையில்         தொப்பியில்லாமல் நான் வந்து
கொண்டிருந்தபோது அவர்         என்னைப் பார்த்தார். தலையில்
உச்சிக்குடுமியும், உடம்பில் பூணூலும் இல்லாமல்   நான் இருந்ததைக்
கண்டு அவருக்கு மனவேதனையாகிவிட்டது.     “ஹிந்து தருமத்தில்
நம்பிக்கையுள்ள நீங்கள், பூணூல் அணியாமலும்     உச்சியில் குடுமி
இல்லாமலும் இருப்பதைக் காண என்    மனம் வேதனைப் படுகிறது.
இவை இரண்டும் ஹிந்து தருமத்தின் புறச் சின்னங்கள்.   ஒவ்வொரு
ஹிந்துவுக்கும் அவை இருந்தாக வேண்டும்” என்றார்.

     இந்த இரண்டையும் நான் எவ்வாறு  விட்டுவிட்டேன் என்பதே
ஒரு தனிச்சரித்திரமாகும். நான்     பத்து வயதுச் சிறுவனாக இருந்த
போது பிராமணச் சிறுவர்கள்      தாங்கள் அணிந்திருந்த பூணூலில்
சாவிக் கொத்துக்களைக்                 கோர்த்து தொங்கவிட்டுக்
கொண்டிருப்பதைப்       பார்த்து நான்  பொறாமைப்படுவது உண்டு.