பக்கம் எண் :

476சத்திய சோதனை

Untitled Document
உண்டாக்கி விட்டது. கிணற்றை உபயோகிப்பது சம்பந்தமாக முதலில்
கஷ்டம் ஏற்பட்டது.        அந்தக் கிணற்றை அந்தப் பங்களாவின்
சொந்தக்காரரும்       உபயோகித்து வந்தார். அதிலிருந்து தண்ணீர்
இறைப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தவர்,    எங்கள் வாளியிலிருந்து
தண்ணீர்த் துளிகள் விழுவதால் தமக்குத் தீட்டுபட்டுப்போகும் என்று
கூறி ஆட்சேபித்தார். ஆகவே, எங்களைத் திட்டினார்; தூதாபாயைத்
தொந்தரவும் செய்தார். அவர்        திட்டுவதையெல்லாம் சகித்துக்
கொண்டு, என்ன வந்தாலும் சரி என்று    கிணற்றிலிருந்து தண்ணீர்
எடுத்துக்கொண்டிருக்கும்படி       எல்லோரிடமும் கூறினேன். தாம்
திட்டினாலும் நாங்கள்         திருப்பித் திட்டுவதில்லை என்பதைக்
கண்டதும் அவருக்கே   வெட்கமாகப் போய் விட்டது. எங்களுக்குத்
தொந்தரவு கொடுப்பதை விட்டு விட்டார்.

     என்றாலும், எங்களுக்கு            கிடைத்துக்கொண்டிருந்த
உதவியெல்லாம் நின்றுவிட்டன.        ஆசிரம விதிகளையெல்லாம்
அனுசரிக்கக் கூடிய ஒரு தீண்டாதார் கிடைப்பாரா   என்று கேள்வி
கேட்ட நண்பர், அப்படிப்பட்ட ஒரு தீண்டாதார்  ஆசிரமத்தில் சேர
முன்வருவார் என்று எதிர்பார்க்கவே இல்லை.

     பண உதவியெல்லாம் நிறுத்திவிட்டதோடு    எங்களைச் சமூக
பகிஷ்காரம் செய்வதற்கும் யோசிக்கிறார்கள்     என்றும் வதந்திகள்
கிளம்பின. இவைகளினால்        நாங்கள் கலக்கமடைந்தோம். நாம்
பகிஷ்காரம் செய்யப்பட்டுச்     சாதாரண வசதிகளெல்லாம் மறுக்கப்
பட்டாலும் அகமதாபாத்தைவிட்டு         நாம் போய்விடக் கூடாது
என்று என் சகாக்களுக்குக் கூறினேன். வெளியேறி  விடுவதைவிடத்
தீண்டாதாரின் இடத்திலேயே போய் வசித்து,       உடலை வருத்தி
வேலை செய்வதால் கிடைப்பதைக்கொண்டு வாழ்வதே மேல் என்றும்
கூறினேன்.

     “நம்மிடம் பணம் இல்லை. அடுத்த மாதச் செலவுக்கு நம்மிடம்
ஒன்றும் கிடையாது” என்று ஒரு நாள்    மகன்லால் காந்தி எனக்கு
அறிவித்துவிட்டார். நிலைமை           அத்தகைய நெருக்கடியான
கட்டத்திற்கு வந்துவிட்டது. “அப்படியானால்,   தீண்டாதார் வசிக்கும்
இடத்திற்கே நாம் போய்விடுவோம்” என்று     நான் அமைதியோடு
பதில் சொன்னேன்.

     இதுபோன்ற சோதனை எனக்கு ஏற்பட்டது இது முதல் தடவை
அல்ல. இத்தகைய   நிலைமைகளிலெல்லாம்      கடைசி நேரத்தில்
கடவுளே எனக்கு உதவியை       அனுப்பியிருக்கிறார். எங்களுக்கு
ஏற்பட்டுவிட்ட பணக் கஷ்டத்தைக்      குறித்து மகன்லால் எனக்கு
எச்சரிக்கை செய்த பிறகு ஒரு நாள் காலை,   குழந்தைகளில் ஒன்று
ஓடி வந்து, ஒரு சேத் வெளியில்   மோட்டாரில் இருக்கிறார் என்றும்,
என்னைப்பார்க்க விரும்புகிறார் என்றும் கூறியது.  அவரைப் பார்க்க
வெளியே போனேன். “ஆசிரமத்திற்குக் கொஞ்சம் உதவி