பக்கம் எண் :

ஒப்பந்தத் தொழிலாளி முறை ஒழிப்பு 479

Untitled Document
அஞ்சுகிறேன். என்றாலும், கடவுள் அருள் இருந்தால், இவ்வரலாற்றை
ஒத்துழையாமை நாட்கள் வரைக்கும் கொண்டு   வந்துவிடவேண்டும்
என்பதே என் ஆசையும் நம்பிக்கையுமாகும்.

11 ஒப்பந்தத் தொழிலாளி முறை ஒழிப்பு

     வெளிப் புயல்களையும் உட்புயல்களையும்   ஆரம்பத்திலேயே
சமாளிக்க வேண்டியதாயிருந்த             ஆசிரமத்தின் கதையை
இப்போதைக்கு நிறுத்திவிட்டு அப்பொழுது என்        கவனத்தைக்
கவர்ந்திருந்த மற்றொரு விஷயத்தைக் கொஞ்சம் கவனிப்போம்.

     ஐந்து ஆண்டுகளுக்கும், அதற்குக்   குறைவான காலத்திற்கும்
வேலை செய்வது என ஒப்பந்தம் செய்து கொண்டு,   அதன்பேரில்
வெளிநாடுகளுக்குச் சென்றவர்களே     ஒப்பந்தத் தொழிலாளர்கள்
நேட்டாலுக்கு ஒப்பந்தப்படி    சென்றிருந்தவர்களுக்கு விதித்திருந்த
மூன்று பவுன் வரி, 1914-இல்             ஏற்பட்ட ஸ்மட்ஸ்-காந்தி
ஒப்பந்தத்தின்படி ரத்தாயிற்று. என்றாலும்,        இந்தியாவிலிருந்து
வெளிநாடுகளுக்குச் செல்லும் விஷயமே    கவனிக்க வேண்டியதாக
இருந்தது.

     ஒப்பந்தத் தொழிலாளர்        முறையை ரத்துச் செய்துவிட
வேண்டும் என்று 1916 மார்ச்சில் பண்டித மதன் மோகன மாளவியா
இம்பீரியல் சட்டசபையில் ஒரு        தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானத்தை லார்டு ஹார்டிஞ்சு      ஏற்றுக் கொண்டார். அதோடு,
அம்முறையை,       “உரிய காலத்தில் ரத்துச் செய்து விடுவதாகப்
பிரிட்டிஷ் அரசாங்கத்தினிடமிருந்து வாக்குறுதி   கிடைத்திருக்கிறது”
என்றும் அறிவித்தார். ஆயினும் இவ்விதமான    திட்டமில்லாத ஒரு
வாக்குறுதியைக் கொண்டு இந்தியா திருப்தி அடைந்துவிட முடியாது
என்றும், அம்முறையை  உடனே ரத்துச் செய்துவிட வேண்டுமெனக்
கிளர்ச்சி                 செய்ய வேண்டும் என்றும் கருதினேன்.
அசிரத்தையினாலேயே            அம்முறையை இந்தியா சகித்து
வந்திருக்கிறது; அதற்குப்       பரிகாரம் வேண்டும் என்று மக்கள்
வெற்றிகரமாகக் கிளர்ச்சி செய்ய வேண்டிய   சமயம் வந்துவிட்டது
என்றும் கருதினேன். தலைவர்களில் சிலரைச் சந்தித்துப் பேசினேன்;
பத்திரிக்கைகளுக்கும் எழுதினேன். அம்முறையை   உடனே ரத்துச்
செய்ய வேண்டும் என்பதற்கு          ஆதாரமாகவே பொதுஜன
அபிப்பிராயம் இருக்கிறது என்பதையும் கண்டேன். சத்தியாக்கிரகம்
செய்வதற்கு இது ஏற்ற விசயமா? ஏற்ற விசயமே என்பதில் எனக்கு
எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால், அதை எம் முறையில்
நடத்துவது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.

     இதற்கிடையில் வைசிராய்,       “முடிவாக ரத்துச் செய்வது”
என்பதன் பொருள்        இன்னதென்பதைக் குறித்து எந்த ஒளிவு
மறைவும் செய்யவில்லை.      “இதற்கு மாறானதொரு ஏற்பாட்டைக்
கொண்டு