பக்கம் எண் :

480சத்திய சோதனை

Untitled Document
வருவதற்கு நியாயமாக வேண்டிய    காலத்திற்குப் பிறகு அம்முறை
ரத்துச் செய்யப்படும்” என்று அவர் கூறினார்.

     ஆகவே, அம்முறையை      உடனே ரத்து செய்வதற்கு ஒரு
மசோதாவைக் கொண்டுவரப் பண்டித மாளவியாஜி 1917 பிப்ரவரியில்
அனுமதி கோரினார். அனுமதி கொடுக்க      லார்டு செம்ஸ்போர்டு
மறுத்து விட்டார். இந்தியா முழுவதிலும் இதைக் குறித்துக்  கிளர்ச்சி
செய்வதற்காக நான் சுற்றுப் பிரயாணம் செய்ய   வேண்டியதாயிற்று.

     கிளர்ச்சியை ஆரம்பிப்பதற்கு முன்னால் வைசிராயைக் கண்டு
பேசுவதே முறை என்று கருதினேன்.    கண்டு பேச விரும்புவதாக
எழுதினேன். வைசிராயும் உடனே அனுமதி  கொடுத்தார். ஸ்ரீ மேபி
(இப்பொழுது ஸர் ஜான் மேபி)          அப்பொழுது வைசிராயின்
அந்தரங்கக் காரியதரிசி. அவருடன்          நெருங்கிய தொடர்பு
கொண்டேன். லார்டு            செம்ஸ்போர்டுடன் நான் பேசியது
திருப்திகரமாகவே இருந்தது.        திட்டமாகச் சொல்லாமல், தாம்
உதவியாக இருப்பதாக அவர் வாக்களித்தார்.

     என் சுற்றுப் பிரயாணத்தைப் பம்பாயிலிருந்து  ஆரம்பித்தேன்.
ஏகாதிபத்தியப் பிரஜாவுரிமைச் சங்கத்தின் ஆதரவில்  அங்கே ஒரு
பொதுக்கூட்டத்தை நடத்த    ஜஹாங்கீர் பெடிட் ஒப்புக்கொண்டார்.
அக்கூட்டத்தில்            கொண்டுவர வேண்டிய தீர்மானத்தைத்
தயாரிப்பதற்காக அச்சங்கத்தின்         நிர்வாகக் கமிட்டி முதலில்
கூடியது. டாக்டர் ஸ்டான்லி ரீட், (இப்பொழுது ஸர்)   ஸ்ரீ லல்லுபாய்
சாமளதாஸ், ஸ்ரீ நடராஜன்,         பெடிட் ஆகியவர்கள் கமிட்டிக்
கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.    ஒப்பந்தத் தொழிலாளர் முறையை
எந்தக் காலத்திற்குள் நீக்கிவிட      வேண்டும் என்று சர்க்காரைக்
கேட்பது என்பதை நிர்ணயிப்பதைப் பற்றியே விவாதம்     நடந்தது.
மூன்று யோசனைகள் கூறப்பட்டன. ‘முடிந்த வரையில்   சீக்கிரமாக
ரத்துச் செய்வது’, ‘ஜூலை 31-ஆம்   தேதிக்குள் ரத்துச் செய்வது’,
‘உடனே ரத்துச் செய்வது’ என்பவையே அந்த மூன்று யோசனைகள்.
குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் அரசாங்கம்     நமது கோரிக்கைக்கு
இணங்கத் தவறிவிட்டால் அதன் பிறகு என்ன   செய்வது என்பதை
நாங்கள் அப்போது        முடிவு செய்ய இயலும் என்ற நிலையில்,
திட்டமான தேதி ஒன்றைக்       குறிப்பிட்டுவிட வேண்டும் என்று
கூறினேன். ‘உடனே ரத்துச்    செய்துவிட வேண்டும்’ என்பதை ஸ்ரீ
லல்லுபாய் கூறினார். ஜூலை 31-ஆம் தேதியைவிட  மிகக் குறைந்த
காலத்தையே ‘உடனே’ என்ற     சொல் குறிக்கிறது என்றார் அவர்.
‘உடனே’ என்ற சொல்லை மக்கள்     புரிந்துகொள்ள மாட்டார்கள்
என்று நான் விளக்கினேன். அவர்கள்        ஏதாவது செய்யும்படி
பார்க்கவேண்டும் என்று             நாம் விரும்பினால், இன்னும்
திட்டவட்டமான சொல்         அவர்களுக்கு வேண்டும் என்றேன்